ரிப்பன் பகோடா | Ribbon pakoda in Tamil

எழுதியவர் Adaikkammai annamalai  |  9th Jan 2018  |  
4 from 2 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Ribbon pakoda by Adaikkammai annamalai at BetterButter
ரிப்பன் பகோடாAdaikkammai annamalai
 • ஆயத்த நேரம்

  25

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

5

2

7 votes
ரிப்பன் பகோடா recipe

ரிப்பன் பகோடா தேவையான பொருட்கள் ( Ingredients to make Ribbon pakoda in Tamil )

 • பூண்டு - 5
 • பொட்டுக்கடலை -250
 • உளுந்து -50
 • எண்ணெய் - பொரிக்கும் அளவு
 • உப்பு - தேவையானா அளவு
 • அரைத்து எடுக்கவேண்டிய பொருட்கள் மாவுடன்
 • புழுங்கரிசி - 4 டம்ளர்
 • சோம்பு - 2 ஸ்பூன்
 • பெருங்காயம் - சிட்டிகை

ரிப்பன் பகோடா செய்வது எப்படி | How to make Ribbon pakoda in Tamil

 1. முதலில் பூண்டை வேக வைத்து எடுத்து கொள்ளவும்
 2. புழுங்கரிசியை 1 மணி நேரம் மேல் ஊற வைக்கவும்
 3. பிறகு ஊற வைத்த அரிசியை எடுத்து அலசி க்ரைண்டரில் நைசாக அரைக்கவும் . அதனுடன் வேக வைத்த பூண்டு, வரமிளகாய் -7, சோம்பு - 2 ஸ்பூன் , பெருங்காயம் - சிட்டிகை , உப்பு சேர்த்து நன்றாக க்ரைண்டரில் தண்ணீர் நிறையாக ஊற்றாமல் கெட்டியாக அரைத்து எடுத்து பௌலில் தனியாக எடுத்து கொள்ளவும்.
 4. உளுந்து மற்றும் பொட்டுக்கடலையை தனித்தனியாக வறுத்து எடுத்து ரொம்பவும் சிவக்காமல் நடுநிலையாக வறுத்து எடுத்து மிக்ஸ்யில் அரைத்து எடுத்து சலித்து கொள்ளவும்
 5. கிரைண்டரில் அரைத்து எடுத்து வைத்த மாவுடன் மிக்ஸ்யில் அரைத்து எடுத்த வைத்த உளுந்த மாவை அதில் சேர்த்து கிளறவும். முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்து கொள்ளவும்
 6. அதனுடன் 2 ஸ்பூன் எண்ணெய் சூடு செய்து அதனுடன் சேர்த்து உப்பு தேவையானால் போட்டு மாவை கெட்டியாகவும் இல்லாமல், தண்ணியாகவும் இல்லாமல் முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்து கொள்ளவும்
 7. பிறகு எண்ணையை பறக்க காய வைத்து ரிப்பன் பகோடா அச்சை கொண்டு நேரடியாக அடுப்பில் பிழிந்து ஓரளவு சிவக்க எடுக்கவும்
 8. இதை உடைத்து எடுத்து ஏர் டைட் ஜாரில் வைத்து கொள்ளுங்கள்
 9. சுவையான ரிப்பன் பக்கோடா தயார்

எனது டிப்:

பூண்டு சேர்ப்பதனால் சுவை அதிகமாக இருக்கும் .. உடம்பிற்கு நல்லது . காரம் கூட சேர்த்தால் சுவையாக இருக்கும்

Reviews for Ribbon pakoda in tamil (2)

Nisha Khaja2 years ago

Nice
Reply
Adaikkammai annamalai
2 years ago
tq

Divya Padmanathan2 years ago

Super
Reply
Adaikkammai annamalai
2 years ago
tq