Photo of Paal kolukattai by Bena Aafra at BetterButter
437
11
0.0(4)
0

Paal kolukattai

Jan-09-2018
Bena Aafra
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
59 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அரிசி மாவு - 2கப்
  2. வெல்லம்
  3. பட்டை
  4. ஏலக்காய்
  5. தேங்காய்ப்பூ
  6. தண்ணீர்
  7. எண்ணெய்

வழிமுறைகள்

  1. முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைத்து தண்ணீர் சேர்த்து, அதில் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  2. பின் அவற்றை அரிசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.
  3. பின் மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்தை கரைத்து அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விட்டு கம்பி பதத்தில் இறக்கி வடிகட்டி வைத்து கொள்ள வேண்டும்.
  4. மாவை சிறிது எடுத்து சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ள வேண்டும்.
  5. பின் அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை,ஏலக்காய் சேர்த்து பொரிந்ததும் தண்ணீர் சேர்க்க வேண்டும்.
  6. பின் தண்ணீர் கொதித்ததும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை சிறிது தண்ணீர் தெளித்து விட்டு ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் போட வேண்டும்.
  7. பின் அவற்றை கிளறி விடவும்.
  8. நன்றாக உருண்டைகள் வெந்ததும் வடிகட்டி வைத்துள்ள வெல்லத்தை ஊற்றி கொதிக்க விடவும்.
  9. பின் சிறிது அரிசி மாவை தண்ணீர் ஊற்றி கரைத்து கொதிக்கும் கொழுக்கட்டையில் சேர்த்து கிளறி வேகவிடவும்.
  10. கடைசியாக தேங்காய்ப்பூ சேர்த்து கிளறி விட்டு இறக்கவும்.
  11. சூடான சுவையான பாலும்பழங்கா(பால் கொழுக்கட்டை )ரெடி.
  12. சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (4)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Appas Rahath
Jan-10-2018
Appas Rahath   Jan-10-2018

Super recipe

Bena Bava
Jan-09-2018
Bena Bava   Jan-09-2018

Nice recipe

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்