வீடு / சமையல் குறிப்பு / நியூட்ரெலா சோயா புலாவ்

Photo of Nutrela Soya Pulao by Nutrela Soya at BetterButter
5326
353
4.5(0)
0

நியூட்ரெலா சோயா புலாவ்

Feb-06-2016
Nutrela Soya
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பஞ்சாபி
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1 கப் நியூட்ரெலா சோயா துண்டுகள்
  2. 3 கப் சாதம்
  3. 3 நடுத்தர அளவுள்ள தக்காளி, பொடியாக நறுக்கியது
  4. 1 கேரட், துண்டுபோடப்பட்டு வேகவைத்தது
  5. 1 நடுத்தர அளவுள்ள பச்சை குடமிளகாய்
  6. 2 தேக்கரண்டி பாவ் பஜ்ஜி மசாலா
  7. 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்ச் சாந்து
  8. ½ கப், பச்சைப் பட்டாணி வேகவைத்தது
  9. 1 நடுத்தர அளவு வெங்காயம், பொடியாக நறுக்கியது
  10. 2 தேக்கரண்டி புதிய கொத்துமல்லி நறுக்கியது
  11. 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
  12. ½ தேக்கரண்டி இஞ்சி விழுது
  13. ½ தேக்கரண்டி பூண்டு விழுது
  14. ½ தேக்கரண்டி சீரகம்
  15. 2 தேக்கரண்டி எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி சீரகம் சேர்த்து அவை பொன்னிறமாகும்வரை வறுக்கவும். வெங்காயம் சேர்த்து சற்றே பொன்னிறமாகும்வரை வதக்கவும்.
  2. சமைத்த நியூட்ரெலா சோயா துண்டுகள், இஞ்சி விழுது, பூண்டு விழுது, தக்காளி சேர்த்து, தக்காளி மிருதுவாகும்வரை வதக்கவும்.
  3. பச்சைப் பட்டாணி, கேரட், பாவ் பஜ்ஜி மசாலா, சிவப்பு மிளகாய்ச் சாந்து, கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும். கலந்து 3 நிமிடங்களுக்கு வேகவைக்கவும்.
  4. சாதத்தைச் சேர்த்து கலந்துகொள்ளவும். உப்பு, பச்சை குடமிளகாய், கொத்துமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  5. அதிக தீயில் சில நிமிடங்கள் வேகவைக்கவும்.
  6. தயிர் அல்லது ரைத்தாவுடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்