Photo of Athirasam by Adaikkammai Annamalai at BetterButter
785
10
0.0(3)
0

Athirasam

Jan-10-2018
Adaikkammai Annamalai
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • சௌத்இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெல்லம் - 1/2 kg
  2. பச்சரிசி - 4 டம்ளர்
  3. ஏலக்காய் - சிறிது
  4. எண்ணெய் - பொரிக்கும் அளவு

வழிமுறைகள்

  1. முதலில் பச்சரிசியை 1 மணிநேரம் ஊற வைத்து அதை அலசி எடுத்து ஒரு துணியில் பரப்பி சற்று காய வைக்கவும்
  2. தண்ணியில்லாமல் உதிரியாக காய்ந்த பின் மிக்சியில் அரைத்து எடுத்து சலித்து கொள்ளவும்.
  3. பிறகு வெல்லத்தை, 4 டம்ளர் அரிசிக்கு 1 /2 கிலோ வெல்லம் கணக்கு , இதை கொண்டு உங்களின் மாவு கணக்கிற்கு ஏற்ப வெல்லத்தை எடுத்து கொள்ளுங்கள்.
  4. வெல்லத்தை நன்றாக நைய்த்து எடுத்து கொள்ளவும். ரொம்பவும் தண்ணியில்லாமல் கெட்டியாக வும் இல்லாமல், கை நனையும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு சட்டியில் வெல்லத்த்தையும் தண்ணீரையும் சேர்த்து அடுப்பில் வைக்கவும்
  5. வெள்ளம் கரைந்து லேசாக சூடு வந்தவுடன் கம்பி வடிகட்டியில் வடிகட்டிட வேண்டும் ..
  6. வடிகட்டி எடுத்த வெல்ல தண்ணியை மறுபடியும் அடுப்பில் போட்டு காய்ச்சி வெல்ல பாகு வரும் வரை கிண்டவும்.
  7. வெல்ல பாகின் பதம் கையில் ஒட்டாமல் உருட்டின்னால் பந்து போல் ஒட்டாமல் ஊருட்டிக்கொண்டு வந்தால் பாகு தயார்
  8. பாகு தயார் ஆன உடனே சலித்து வைத்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கையை எடுக்காமல் நன்றாக கிண்டிக்கொண்டே அனைத்து மாவையும் சிறிது சிறிதாக சேர்த்து விடுங்கள். சேர்த்து நன்றாக பெரிய கனமான கரண்டியை கொண்டு கிளருங்கல்
  9. கையை எடுக்காமல் அடுப்பை சிம்மில் வைத்து கிண்டி மாவு நன்றாக வெல்லத்துடன் சேர்ந்தவுடன் இறக்கவும்.
  10. இறக்கி ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவ வேண்டும் முழுவதுமாக தடவி விட்டு , அதில் கிண்டிய மாவை அதில் சேர்த்து மூடி வைக்கவும்,
  11. அடுத்த நாள் அல்லது ஒரு வாரம் வரையில் வேளையில் வைத்து எப்போது வேண்டுமானாலும் எடுத்து தட்டலாம்.
  12. ஆனால் தட்டுவதற்க்கு மாவு உறவு சேர வேணும் .. அதனால் அடுத்த நாள் எடுத்து தட்டுங்கள்
  13. தட்டுவதற்கு ஒரு இருப்பு சட்டியில் எண்ணெய்யை காய வைத்து நன்றாக காய்ந்த பின் கையில் என்னை தடவி கொண்டு ஒரு ஒரு பிளாஸ்டிக் பேப்பரிலும் எண்ணெய் தடவி அதில் வட்டமாக தட்டி அல்லது நடுவில் ஓட்டை போட்டு எண்ணெயில் போட்டு, பொறி அடங்கிய பின் எடுத்து கொள்ளலாம்
  14. சுவையான அதிரசம் தயார். உடனே சாப்பிட்டால் சுவையாக இருக்காது ...சூடு ஆரிய வுடன் சாப்பிடக் தான் சுவை அதிகமாக இருக்கும்

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Paramasivam Sumathi
Jan-11-2018
Paramasivam Sumathi   Jan-11-2018

Yummy

Pushpa Taroor
Jan-10-2018
Pushpa Taroor   Jan-10-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்