வீடு / சமையல் குறிப்பு / Raagi puttu in cooker easy method

Photo of Raagi puttu in cooker easy method by Adaikkammai Annamalai at BetterButter
975
9
0.0(1)
0

Raagi puttu in cooker easy method

Jan-10-2018
Adaikkammai Annamalai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • பிரெஷர் குக்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கேப்பை மாவு - 2 கப்
  2. பச்சரிசி மாவு - 1 கப்
  3. உப்பு - சிட்டிகை
  4. சீனி - 1 கப்
  5. தேங்காய் பூ - 1 கப்
  6. பாசி பயிறு - 2 ஸ்பூன்
  7. ஏலக்காய் - சிறிது
  8. நெய் - 3 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கேப்பைமாவு 2 கப் மற்றும் பச்சரிசி மாவு 1 கப் எடுத்து சிறிது உப்பு சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும்
  2. தண்ணியை ஊற்றாமல் கொஞ்சம் கொஞ்சமாக தொழித்து உதிரியாக பிசைந்து எடுத்து கொள்ளவும்
  3. அதை பெரிய ஓட்டை உள்ள சல்லடையில் சலித்து கட்டியில்லமல் சலித்து எடுத்து கொள்ளுங்கள் இதே போல்
  4. பின் ஒரு பாத்திரத்தில் எடுத்து அமுக்கி வைத்து அதில் அங்கே அங்கே குத்தி விடுங்கள். அப்பொழுதான் சீக்கிரம் வேகும். வியர்வை தண்ணி இறங்காது.
  5. பின் அல்லி வைத்த பாத்திரத்தை குக்கரில் தண்ணீர் ஊற்றிமேலே அந்த பாத்திரத்தில் வைத்து மூடி 2 சவுண்ட் 5 நிமிடம் வேக வைக்கவும்
  6. பாசிப் பருப்பு ஊற வைத்து கொல்லவும் 1/2 மணி நேரம் ஊறிய பின் அதை அலசி தண்ணியில்லாமல் எடுத்து கொள்ளவும்
  7. வேக வைத்ததை எடுத்து ஒரு பௌலில் கொட்டி ஆற வைக்கவும் அப்பொழுதான் புட்டு உதிரியாகும் .
  8. ஆரிய பின் அதில் சர்க்கரை சேர்த்து கிளறவும் தேவையென்றால் அவரவர் சுவைக்கேற்ப சீனி சேர்த்து கொள்ளலாம்
  9. அதன் பின் ஒரு இருப்பு சட்டியில் நெய் ஊற்றி காய வைத்து அதில் ஊறவைத்து சளி எடுத்து வைத்த பசிப்பாறுப்பை நெயில் போட்டு அதனுடன் 1 கப் தேங்காயை மற்றும் ஏலக்காய் பொடியை போட்டு சிவக்க வதக்கவும்
  10. சிவக்க வதங்கியவுடன் ஆற வைத்து எடுத்து வைத்த கேப்பையுடன் சேர்த்து கொட்டவும்
  11. நன்றாக கிளறவும், தூளாகும் வரை
  12. சுவையான கேப்பை புட்டு தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
neela karthik
Jan-10-2018
neela karthik   Jan-10-2018

Na try pannirukken but rice flour add panna matten

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்