வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் தோல் துவையல்

Photo of Ridge gourd peel thuvaiyal by Banupriya Jawahar at BetterButter
287
4
0.0(0)
0

பீர்க்கங்காய் தோல் துவையல்

Jan-11-2018
Banupriya Jawahar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் தோல் துவையல் செய்முறை பற்றி

பீர்க்கங்காய் தோலை வீணாக்காமல் ஒரு சுவையான துவையல்!

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. 1/2 கிலோ பீர்க்கங்காயில் இருந்து எடுக்கப்பட்ட தோல்
  2. கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி
  3. அ.உ. பருப்பு - 1 மேஜைக்கரண்டி
  4. மிளகாய் வற்றல் - 5
  5. புளி - அரை நெல்லிக்காய் அளவு
  6. தேங்காய் துருவல் 3 மேஜைக்கரண்டி
  7. பெருங்காயத்தூள் 1 சிட்டிகை
  8. கறிவேப்பிலை 1 ஆர்க்கு
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் 1 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. அரை கிலோ பீர்க்கங்காயை நன்கு கழுவி, தோலை சீவி எடுத்துக் கொள்ளவும்.
  2. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடலைப் பருப்பு, அ.உ. பருப்பு, புளி, தேங்காய் துருவல், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு தாளிக்கவும்.
  3. பின் அதே வாணலியில் பீர்க்கங்காய் தோலை நன்கு வதக்கவும்.
  4. தாளிதம் செய்த பொருட்கள் மற்றும் வதக்கிய பீர்க்கங்காய் தோல் ஆறியதும் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
  5. சுவையான பீர்க்கங்காய் தோல் துவையல் ரெடி!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்