வீடு / சமையல் குறிப்பு / அவித்த பனங்கிழங்கு

Photo of Boiled  panangkilangu / Palmyra tuber by Asiya Omar at BetterButter
1468
7
0.0(0)
0

அவித்த பனங்கிழங்கு

Jan-11-2018
Asiya Omar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

அவித்த பனங்கிழங்கு செய்முறை பற்றி

பனங்கொட்டையில் இருந்து விளைந்து வரும் கிழங்கு, பொங்கல் சமயம் மார்க்கெட்டுகளில் கரும்புடன் இதுவும் விற்பனைக்கு வரும்.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸ்டீமிங்
  • பேசிக் ரெசிப்பி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பனங்கிழங்கு -12
  2. மஞ்சள் தூள் -1 தேக்கரண்டி
  3. உப்பு - சிறிது.( விரும்பினால்)

வழிமுறைகள்

  1. பனங்கிழங்கை கொண்டைப்பகுதி, வால்ப்பகுதியை அரிந்து விட்டு நன்கு அலசி வைக்கவும்.
  2. இட்லிப்பானையில் தண்ணீர் கீழே வைத்து மேலே தட்டில் கிழங்கை அடுக்கி ஆவியில் வேக வைப்பது தான் அந்தக் கால முறை. குக்கரில் தண்ணீர் மஞ்சள் தூள் சேர்த்தோ அல்லது தட்டில் வைத்து ஆவியில் வேக வைக்கலாம்.
  3. வெந்தபின்பு இரண்டாகப் பிளந்து நடுவில் இருக்கும் குருத்தை எடுத்து விட்டு ,கிழங்கை ஒடிக்கும் பொழுதே நார் எடுத்து ஒடிக்கவும்.
  4. அவித்த பனங்கிழங்கு தயார்.துண்டு துண்டாக எடுத்துச் சாப்பிடலாம்.
  5. அடுப்பில் சுடுவதாய் இருந்தால் தோலுடன் சுட வேண்டும் உரித்து மணக்க மணக்க இருக்கும,ஒடித்தும் சாப்பிடலாம். பனங்கிழங்கை துருவியோ சீவியோ சீனி சேர்த்து தேங்காய்த்துருவல் கலந்தும் சாப்பிடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்