வீடு / சமையல் குறிப்பு / வெல்ல சாதம்/ இனிப்பு தேங்காய் சாதம்

Photo of Vella sadam /sweet coconut rice by Krishnasamy Vidya Valli at BetterButter
1137
5
0.0(0)
0

வெல்ல சாதம்/ இனிப்பு தேங்காய் சாதம்

Jan-11-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெல்ல சாதம்/ இனிப்பு தேங்காய் சாதம் செய்முறை பற்றி

கனுபொங்கலுக்கு கலந்த சாதம் செய்வது வழக்கம். அப்போழுது முந்தய நாள் தான் சர்க்கரை பொங்கல் என்பதால் வித்தியாசமான இந்த சாதம் செய்வார்கள். கலந்த சாதம் என்பதால் மொத்தமாக சாதம் வடித்து விட்டு எளிதில் வெரைட்டி ரைஸ் செய்துவிடலாம். அக்காரவடிசல் அல்லது கல்கண்டு சாதம் செய்வதாக இருந்தால் தனியாக பாலில் வேக வைக்க வேண்டும். ஆனால் இந்த வெல்ல சாதத்திற்கு மற்ற கலந்த சாதத்திற்கு வடித்த சாதம் வைத்தே செய்து விடலாம். பாலும் பாசிப்பருப்பும் தேவையில்லை. இந்த கனுபொங்கலுக்கு மற்ற கலந்த சாதத்துடன் செய்து அசத்தலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சரிசி - 1 / 4 கப்
  2. வெல்லம் - 1 / 2 கப்
  3. தேங்காய் துருவல் - 1 / 8 கப் + 1 மேஜைகரண்டி
  4. நெய் - 3 மேஜைகரண்டி
  5. முந்திரி பருப்பு - 10
  6. கிஸ்மிஸ் - 10
  7. ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை

வழிமுறைகள்

  1. அரிசியை களைந்து குக்கரில் வேக வைக்கவும்
  2. அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு வெல்லம் சேர்த்து கால் கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்
  3. சாதத்தை ஒரு தேக்கரண்டி நெய் விட்டு மசித்து கொள்ளவும்
  4. வெல்லக்கரைசலை விருப்பப்பட்டால் வடிகட்டிக்கொள்ளலாம்
  5. வெல்லகரைசலுடன் சாதம் சேர்த்து ஏலக்காய் பொடி தூவி நன்றாக கிளறவும்
  6. தேங்காய் துருவலில் ஒரு தேக்கரண்டி தவிர மற்றதை சேர்த்து கிளறவும்
  7. ஒரு தேக்கரண்டி தவிர மற்ற நெய் முழுவதும் விட்டு சேர்த்து கிளறி இறக்கவும்
  8. நெய்யில் முந்திரி பருப்பு கிஸ்மிஸ் தேங்காய் துருவல் சேர்த்து வறுக்கவும்
  9. வறுத்ததை சேர்த்து பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்