வீடு / சமையல் குறிப்பு / நெல்லை பொங்கல் ஸ்பெஷல் இடி சாம்பார்

Photo of Nellai pongal special idi sambar by Krishnasamy Vidya Valli at BetterButter
410
5
0.0(0)
0

நெல்லை பொங்கல் ஸ்பெஷல் இடி சாம்பார்

Jan-12-2018
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

நெல்லை பொங்கல் ஸ்பெஷல் இடி சாம்பார் செய்முறை பற்றி

பொங்கலுக்கு திருநெல்வேலியில் இந்த இடி சாம்பார் செய்வார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. காய்கள் நறுக்கியது - 2 கப் ( சின்ன வெங்காயம் முருங்கைக்காய் தக்காளி பூசணிக்காய் கேரட் பீன்ஸ் உருளைகிழங்கு கத்தரிக்காய் )
  2. புளி - ஒரு எலுமிச்சை அளவு
  3. துவரம்பருப்பு - 1 / 4 கப்
  4. உப்பு - 1 1 / 2 தேக்கரண்டி
  5. மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
  6. பெருங்காயம் - 2 சிட்டிகை
  7. எண்ணெய் - 1 தேக்கரண்டி
  8. அப்படியே அரைக்க (பச்சையாக)
  9. தேங்காய் துருவல் - 2 மேஜைகரண்டி
  10. சீரகம் - 1 / 2 தேக்கரண்டி
  11. வறுத்து திரிக்க
  12. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
  13. உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
  14. துவரம்பருப்பு - 1 தேக்கரண்டி
  15. அரிசி - 1/2 தேக்கரண்டி
  16. கொத்தமல்லி விதை - 2 தேக்கரண்டி
  17. மிளகாய் வத்தல் - 8 முதல் 10
  18. பெருங்காயம் - 2 சிட்டிகை
  19. வெந்தயம் - 1 / 4 தேக்கரண்டி
  20. தாளிக்க கடுகு - 1 தேக்கரண்டி
  21. வெந்தயம் - 1 / 2 தேக்கரண்டி
  22. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  23. எண்ணெய் - 1 தேக்கரண்டி
  24. சின்ன வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கிக்கொள்ளவும் )
  25. பெருங்காயம் - 2 சிட்டிகை
  26. மிளகாய் வத்தல் - 2
  27. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. காய்கள் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  2. நறுக்கியதில் நான்கு சின்ன வெங்காயம் தக்காளியில் பாதியளவு மற்றும் பீன்ஸ் கேரட் உருளைகிழங்கு பெருங்காயம் தேவையான தண்ணீர் சேர்த்து துவரம்பருப்பை குக்கரில் வேக வைக்கவும்
  3. கடாயில் வறுக்க கொடுக்கப்பட்ட பொருட்கள் சேர்த்து வறுத்து கொள்ளவும்
  4. ஆறவைத்து மிக்ஸியில் கரகரப்பாக திரிக்கவும்
  5. தேங்காய் துருவல் சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
  6. கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் போட்டு வதக்கவும் பச்ச வாசனை போனவுடன் முருங்கைக்காய் பூசணிக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்
  7. சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  8. பாதி வெந்தவுடன் மீதி தக்காளி உப்பு மற்றும் புளியை கரைத்து சேர்க்கவும்
  9. குக்கரில் வேக வைத்ததையும் மிக்ஸியில் திரித்ததையும் சேர்க்கவும்
  10. அரைத்த தேங்காய் விழுதுசேர்த்து ஒருகொதிவிடவும்
  11. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளிக்கவும்
  12. தாளித்ததை சேர்த்து கொத்தமல்லி இலை தூவினால் அருமையான நெல்லை பொங்கல் ஸ்பெஷல் இடி சாம்பார் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்