வீடு / சமையல் குறிப்பு / சொஜ்ஜி அப்பம்

Photo of Sojji Appam by Sowmya Sundar at BetterButter
521
6
0.0(0)
0

சொஜ்ஜி அப்பம்

Jan-13-2018
Sowmya Sundar
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
50 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சொஜ்ஜி அப்பம் செய்முறை பற்றி

போகி பண்டிகை அன்று போளி செய்வது வழக்கம்.ரவை கேசரி போல செய்து அதை போளி பூரணம் போல அடைத்து செய்யும் சுவையான பலகாரம் இது.எண்ணெயில் பொரித்து எடுப்பதற்கு பதில் தோசை கல்லில் போட்டு பான் ஃப்ரை செய்துள்ளேன்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கடினம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மைதா மாவு - 1 1/2 கப்
  2. கோதுமை மாவு- 1/2 கப்
  3. எண்ணெய் நெய் தேவையான அளவு
  4. ரவை - 1 கப்
  5. தேங்காய் - 1/4 கப்
  6. வெல்லம் - 1 1/2 கப்
  7. ஏலக்காய் - 1/2 டீஸ்பூன்
  8. உப்பு ஒரு சிட்டிகை
  9. மஞ்சள் தூள-ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. மைதா மாவு ,கோதுமை மாவை மஞ்சள் தூள்,உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் , சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.மாவு சிறிது தளர்ந்து இருக்க வேண்டும்.இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. ரவையை கடாயில் லேசாக வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும் .அதே கடாயில் தண்ணீர் 2 1/4 கப் விட்டு கொதி வந்ததும் ரவையை சேர்த்து வேகும் வரை கிளறவும்.
  3. பின்னர் அதில் வெல்லம் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கெட்டியாக ஆகும் வரை கிளறி சிறிது நெய் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
  4. ஆறியதும் ரவை கலவையை உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.அதே போல் மைதா மாவையும் உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
  5. மைதா உருண்டையை சிறிய பூரியாக தேய்த்து அதில் ஒரு பூரணம் வைத்து மூடி கையால் லேசாக போளி போல் இலை அல்லது ஃபாயில் பேப்பரில் தட்டி கொள்ளவும்.எண்ணெய் தொட்டு தட்டவும் .
  6. இதேபோல் அனைத்தையும் பூரணம் வைத்து தட்டி கொள்ளவும்.
  7. தோசை கல்லில் காய்ந்ததும் ஒவ்வொரு போளியாக போட்டு மிதமான தீயில் நெய் எண்ணெய் விட்டு நன்றாக வேக விட்டு எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்