வீடு / சமையல் குறிப்பு / வரகு அரிசி சிவப்பு அவல் பருப்பு காரபொங்கல்

Photo of Varagu rice red poha dal kara pongal by Krishnasamy Vidya Valli at BetterButter
569
4
0.0(0)
0

வரகு அரிசி சிவப்பு அவல் பருப்பு காரபொங்கல்

Jan-14-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வரகு அரிசி சிவப்பு அவல் பருப்பு காரபொங்கல் செய்முறை பற்றி

வரகு அரிசி சிறு தானியங்களில் ஒன்றுமட்டுமல்ல ஆரோக்கியமானதுகூட. அதோடு சிவப்பு அவல் சேர்க்கும் போது கூடுதல் ஆரோக்கியம். செய்வது மிகமிக சுலபம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • பிரெஷர் குக்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வரகு அரிசி - 1 / 2 கப்
  2. சிவப்பு அவல் - 1 / 8 கப்
  3. துவரம்பருப்பு/பாசிப்பருப்பு - 1 / 8 கப்
  4. உப்பு - - 3/4 தேக்கரண்டி
  5. மிளகாய் வத்தல் - 3 அல்லது4
  6. இஞ்சி - 1 சிறிய துண்டு
  7. பெருங்காயம் - 4 சிட்டிகை
  8. நெய் - 3 தேக்கரண்டி
  9. முந்திரி பருப்பு - 10 ( விருப்பப்பட்டால் )
  10. தாளிக்க கடுகு - 1 தேக்கரண்டி
  11. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  12. கருவேப்பிலை - 2 ஆர்க்கு

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் சிவப்பு அவல் துவரம்பருப்பு/பாசிப்பருப்பு மிளகாய்வத்தல் பெருங்காயம் எடுத்துக் கொள்ளவும்
  2. ஒண்ணு இரண்டாக திரிக்கவும்
  3. வரகு அரிசியை களைந்து கொள்ளவும்
  4. குக்கரில் வரகு அரிசி மிக்ஸியில் திரித்தது இஞ்சி மற்றும் 3 கப் தண்ணீர்விட்டு குழைய வேக வைக்கவும்
  5. வெந்ததும் உப்பு சேர்த்து நன்றாக மசித்துக் கொள்ளவும்
  6. கடாயில் நெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை தாளிக்கவும்
  7. மசித்த பொங்கலை சேர்த்து நன்றாக கிளறவும்
  8. விருப்பப்பட்டால் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்