வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் பக்கோடா

Photo of Chicken pakoda by Asiya Omar at BetterButter
67
5
0.0(0)
0

சிக்கன் பக்கோடா

Jan-14-2018
Asiya Omar
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் பக்கோடா செய்முறை பற்றி

இந்த பக்கோடாவை ஸ்நாக்ஸ் அல்லது பக்க உணவாகப் பரிமாறலாம். வெளியே பயணம் போகும் பொழுது எடுத்துச் செல்லலாம்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. எலும்பில்லா சிக்கன் கொத்திய அல்லது சிறிய துண்டுகள் -1/2 கிலோ
  2. சிக்கனில் ஊற வைக்க:-
  3. மிளகாய்த்தூள்-1 தேக்கரண்டி
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் -2 தேக்கரண்டி
  5. மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
  6. கரம் மசாலா -1/4 -1/2 தேக்கரண்டி
  7. எலுமிச்சை சாறு -1 மேஜைக்கரண்டி
  8. உப்பு - தேவைக்கு.
  9. ஊறிய சிக்கனுடன் பிரட்ட:-
  10. கடலை மாவு - 6 மேஜைக்கரண்டி
  11. அரிசி மாவு - 3 மேஜைக்கரண்டி
  12. சோம்புத்தூள் - 2 தேக்கரண்டி
  13. நறுக்கிய பெரிய வெங்காயம் - 2-3
  14. நறுக்கிய பச்சை மிளகாய் -3
  15. நறுக்கிய மல்லியிலை,கருவேப்பிலை
  16. உப்பு.
  17. பொரிக்க - எண்ணெய் தேவைக்கு.

வழிமுறைகள்

  1. சிக்கன் துண்டுகளை அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.மேற்சொன்னபடி மசாலா சேர்த்து ஊற வைக்கவும்.
  2. ஊறிய சிக்கனுடன் கடலை மாவு,அரிசி மாவு,பொடித்த சோம்பு ,நறுக்கிய வெங்காயம்,மிளகாய்,மல்லி,கருவேப்பிலை,சுவைக்கு உப்பும் சேர்க்கவும்.
  3. நன்கு விரவி வைக்கவும்.
  4. தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளிக்கலாம்.சிக்கன்,வெங்காயத்தில் உள்ள ஈரமே போதும்.
  5. ஒரு கடாயில் தாராளமாக எண்ணெய் காய வைக்கவும்.நெருப்பை மீடியமாக வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  6. எண்ணெய் வடித்து எடுக்கவும்.
  7. சுவையான சிக்கன் பக்கோடா தயார்.ஸ்நாக்ஸ் அல்லது பக்க உணவாகப் பயன்படுத்தலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்