Photo of Mixed Vegetables Pepper Curry by Bena Aafra at BetterButter
271
13
0.0(4)
0

Mixed Vegetables Pepper Curry

Jan-14-2018
Bena Aafra
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உருளைக் கிழங்கு
  2. கேரட்
  3. பச்சை பட்டாணி
  4. பீன்ஸ்
  5. பேபி கார்ன்
  6. வெங்காயம்
  7. இஞ்சி பூண்டு விழுது
  8. தக்காளி
  9. பச்சை மிளகாய்
  10. கறிவேப்பிலை
  11. கொத்தமல்லித்தழை
  12. புதினா
  13. பட்டைஏலக்காய் தூள்
  14. மிளகாய்தூள்
  15. மஞ்சள் தூள்
  16. சீரகத்தூள்
  17. மிளகு தூள்
  18. உப்பு

வழிமுறைகள்

  1. காய்கறிகளை சிறியதாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும்.
  2. பச்சை பட்டாணி ஊறவைத்து கொள்ள வேண்டும்.
  3. வெங்காயம், தக்காளி -ஐ பொடியாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும்.
  4. உருளைக் கிழங்கு தோல் சீவி நறுக்கி வைத்து கொள்ள வேண்டும்.
  5. அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
  6. பச்சை மிளகாய்,கறிவேப்பிலை, கொத்தமல்லி,புதினா சேர்த்து வதக்கவும்.
  7. பட்டைஏலக்காய் தூள், உப்பு, மஞ்சள் தூள் ,சீரகத்தூள்,சேர்த்து கிளறவும்.
  8. தக்காளி சேர்த்து கொள்ளவும்.
  9. நன்றாக வதங்கியதும் நறுக்கிய காய்கறிகள், பட்டாணி, கார்ன், உருளைக் கிழங்கு சேர்த்து கிளறி விடவும்.
  10. பின் மிளகாய் தூள் சேர்த்து கிளறி விட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைத்து 5 விசில் விடவும்.
  11. பிறகு காய்கறி வெந்ததா என்று பார்த்து மிளகு தூள் சேர்த்து கிரேவியாக வற்ற விட்டு மல்லி இலை தூவி இறக்க வேண்டும்.
  12. சூடான சுவையான காய்கறி உருளைக் கிழங்கு குருமா ரெடி.

மதிப்பீடு (4)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Bena Bava
Jan-14-2018
Bena Bava   Jan-14-2018

Good

Vijay Vijay
Jan-14-2018
Vijay Vijay   Jan-14-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்