வீடு / சமையல் குறிப்பு / அவரைக்காய் மசால்

Photo of Field beans masal by Asiya Omar at BetterButter
331
7
0.0(0)
0

அவரைக்காய் மசால்

Jan-15-2018
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அவரைக்காய் மசால் செய்முறை பற்றி

அவரைக்காய் பொரியலில் வித்தியாசமான மசால் சேர்த்து செய்தது.செமை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அவரைக்காய் -300 கிராம்
  2. மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  3. நறுக்கிய பெரிய வெங்காயம் -1
  4. தேங்காய்த்துருவல் -3 மேஜைக்கரண்டி
  5. வறுத்து பொடித்த வேர்க்கடலை -2 மேஜைக்கரண்டி
  6. உப்பு - தேவைக்கு.
  7. வறுத்துப் பொடிக்க தே.பொ:-
  8. மிளகாய் வற்றல்-2
  9. சீரகம்,சோம்பு -தலா கால் தேக்கரண்டி
  10. முழு மல்லி -1/2 அல்லது 1 தேக்கரண்டி
  11. விரும்பினால் இத்துடன் வேர்க்கடலையும் சேர்த்து வறுக்கலாம்.
  12. தாளிக்க:-
  13. எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
  14. கடுகு,உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
  15. கிள்ளிய மிளகாய் வற்றல் - 1
  16. கருவேப்பிலை -2 இணுக்கு

வழிமுறைகள்

  1. அவரைக்காயை விளிம்பு ஒடித்து நார் எடுக்கவும்.சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. மேற் சொன்னதை வறுத்துப் பொடிக்கவும்.
  3. வேர்க்கடலை வறுத்து தனியாகவும்.மசாலா தனியாகவும் பொடித்துள்ளேன்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு,உ.பருப்பு,வற்றல்,கருவேப்பிலை வெடிக்க விடவும்.வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  5. அவரைக்காய் சேர்த்து வதக்கி,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டவும்.
  6. பொடித்த மசால் சேர்க்கவும். நன்றாக பிரட்டி விடவும்.
  7. சிறிது தண்ணீர் தெளித்து மூடி 5 நிமிடம் வேக விடவும்.
  8. வெந்த பின்பு தேங்காய்த்துருவல் ,வேர்க்கடலை பொடித்தது சேர்த்து பிரட்டவும்.
  9. ஒரு சேர பிரட்டவும்.அடுப்பை சிம்மில் 2 நிமிடம் வைக்கவும். பிரட்டி அடுப்பை அணைக்கவும்.
  10. சுவையான அவரைக்காய் மசால் தயார்.
  11. சாதத்துடன் வாழையிலையில் இந்த மசால் பரிமாறிப்பாருங்க,கேட்டு கேட்டு வாங்கிச் சாப்பிடுவாங்க.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்