வீடு / சமையல் குறிப்பு / ஜவ்வரிசி இனிப்பு பொங்கல்

Photo of Sabudana  sweet pongal by Krishnasamy Vidya Valli at BetterButter
627
5
0.0(0)
0

ஜவ்வரிசி இனிப்பு பொங்கல்

Jan-16-2018
Krishnasamy Vidya Valli
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ஜவ்வரிசி இனிப்பு பொங்கல் செய்முறை பற்றி

ஜவ்வரிசியில் பாயாசம் செய்வார்கள் சற்றே வித்யாசமாக இந்த வெல்ல இனிப்பு பொங்கல் செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. ஜவ்வரிசி - 1 / 8 கப்
  2. வெல்லம் - 1 / 4 கப்
  3. பச்சரிசி - 1 / 2 மேஜைகரண்டி
  4. தேங்காய் துருவல் - 1 / 2 மேஜைகரண்டி
  5. ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
  6. முந்திரி பருப்பு கிஸ்மிஸ் - தலா 5
  7. நெய் - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஜவ்வரிசியை தண்ணீர் விட்டு ஒருமணி நேரம் ஊறவைக்கவும். தேவைப்பட்டால் வெந்நீரில் ஊறவைக்கவும். பச்சரிசி யை தனியாக ஊறவைக்கவும்
  2. ஜவ்வரிசியை குக்கரில் வேக வைத்து எடுக்கவும்
  3. ஊறவைத்த அரிசியை தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  4. கடாயில் வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் விருப்பப்பட்டால் வடிகட்டிக்கொள்ளலாம். சிறிது கெட்டியானதும் வேகவைத்த ஜவ்வரிசியை சேர்க்கவும்
  5. ஒரு தேக்கரண்டி நெய் மற்றும் அரைத்த விழுதை சேர்த்து கிளறவும்
  6. ஏலக்காய் பொடி தூவி நெய்யில் முந்திரி பருப்பு கிஸ்மிஸ் வறுத்து சேர்த்தால் அருமையான ஜவ்வரிசி இனிப்பு பொங்கல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்