வீடு / சமையல் குறிப்பு / பருப்பு பாயசம்

Photo of Paruppu payasam by Asiya Omar at BetterButter
509
4
0.0(0)
0

பருப்பு பாயசம்

Jan-16-2018
Asiya Omar
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பருப்பு பாயசம் செய்முறை பற்றி

பாசிப்பருப்பு,வெல்லம், தேங்காய் சேர்த்து செய்வது.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பாசிப்பருப்பு - ஒரு கப்(150 கிராம்)
  2. வெல்லம் -200-250 கிராம்
  3. ஏலக்காய் -4
  4. தேங்காய்த் துருவியது- ஒரு கப்( கொர கொரவென அரைக்க)
  5. நெய் - 50 மில்லி
  6. முந்திரி,பாதாம்,பிஸ்தா,உலர்திராட்சை- சிறிது
  7. பின்ச் உப்பு - சுவைக்கு.
  8. தேவைக்கு கொதி நீர்.
  9. விரும்பினால் நட்ஸ் பதில் நெய்யில் வறுத்த தேங்காய்த்துண்டுகள் சேர்க்கலாம்.

வழிமுறைகள்

  1. பருப்பை மணம் வரும் படி வறுத்து ஊற வைக்கவும். ஒரு அடுப்பில் பாத்திரத்தில் வெல்லம் ஒரு கப் தண்ணீர் சேர்த்து பாகாக காய்ச்சவும்.
  2. ஏலக்காய் சிறிது சீனி சேர்த்து பொடித்து வைக்கவும்.
  3. இன்னொரு அடுப்பில் பருப்பை 1:4 என்ற அளவு தண்ணீர் விட்டு ப்ரஷர் குக்கரில் 2 விசில் வைத்து அணைக்கவும்.
  4. ஆவியடங்கியவுடன் வெந்த பருப்போடு வெல்லப்பாகு, ஏலப்பொடி சேர்க்கவும்.பின்ச் உப்பு சேர்க்கவும்.
  5. நன்கு கொதி வரவும்,தம்ளரில் பரிமாற ஊற்றிக் குடிக்கும் படி கெட்டி தன்மைக்கேற்ப கொதி நீர் சிறிது சேர்க்கவும். ஒரு கப் தேங்காய் கொர கொரப்பாக அரைத்துச் சேர்க்கவும்.
  6. நெய்யில் வறுத்த முந்திரி,பாதாம்,பிஸ்தா,உலர் திராட்சை, சேர்க்கவும்.அடுப்பை அணைக்கவும்.
  7. அழகாகப் பரிமாறவும்.சுவையான பருப்பு பாயாசம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்