வீடு / சமையல் குறிப்பு / சாமை அரிசி மிளகு முறுக்கு

Photo of Samai Arisi Milagu Murukku  by Panchavarnam Ramasamy at BetterButter
1418
5
0.0(0)
0

சாமை அரிசி மிளகு முறுக்கு

Jan-16-2018
Panchavarnam Ramasamy
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சாமை அரிசி மிளகு முறுக்கு செய்முறை பற்றி

சாமை அரிசியுடன் மிளகு சேர்த்து செய்யப்பட்ட முறுக்கு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சாமை அரிசி 250கிராம்
  2. கடலை மாவு. 100கிராம்
  3. மிளகு. 25கிராம்
  4. பெருங்காயப்பொடி 2டீஸ்பூன்
  5. எள்ளு. .2டீஸ்பூன்
  6. ஓமம் . 2டீஸ்பூன்
  7. கடலை எண்ணெய் காய்ச்சியது 2கரண்டி
  8. வெண்ணெய். 25கிராம்
  9. உப்பு தே.அளவு
  10. பொரிக்க தே.அளவு ஆயில்/க.எண்ணெய்

வழிமுறைகள்

  1. சாமை அரிசியைச்சுத்தம் செய்து நீரில் அரை மணி நேரம் ஊற வைத்து நீரை வடித்து விட்டு நிழலில் உலர வைக்கவும்
  2. அதனை மிக்சியில் இட்டு நைசாக அரைத்து வைக்கவும்.
  3. கடலை மாவை ஜல்லடையில் சலித்து வைக்கவும்
  4. எள்ளை சுத்தம் செய்து நீரில் அரை மணி நேரம் ஊற வைத்து நீரை வடிகட்டி வைக்கவும்
  5. ஓமத்தையும் சுத்தம் செய்து வைக்கவும்
  6. மிளகை மிக்சியில் இட்டு ஒன்றிரண்டாகப்பொடித்துக்கொள்ளவும்.
  7. சாமை அரிசி மாவு ,கடலை மாவு,மிளகுப்பொடி,பெருங்காயப்பொடி,ஓமம்,காய்ச்சிய சூடான கடலை எண்ணெய்,வெண்ணெய்,தேவையான உப்பு ஆகியவைகளைச்சேர்த்து எல்லாவற்றையும் நன்கு கலக்கவும்.
  8. கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்திற்குப்பிசையவும்.
  9. அடுப்பில் ஆயில் அல்லது கடலை எண்ணெயைக்கடாயில் ஊற்றி மீடியம் தீயில் காய வைக்கவும்
  10. முறுக்கு அச்சுக்குழலில் மாவைப்பிழிந்து எண்ணெயில் போட்டு இரு புறமும் வெந்தபின் எடுக்கவும்.
  11. கைமுறுக்கு சுற்றத் தெரிந்தவர்களுக்கு கைமுறுக்காகப்பிழிந்து வேகவைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்