வீடு / சமையல் குறிப்பு / சீனியில்லா பேரீட்சை நட்ஸ் போளி

Photo of Sugar free dates  nuts poli by Krishnasamy Vidya Valli at BetterButter
424
4
0.0(0)
0

சீனியில்லா பேரீட்சை நட்ஸ் போளி

Jan-16-2018
Krishnasamy Vidya Valli
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சீனியில்லா பேரீட்சை நட்ஸ் போளி செய்முறை பற்றி

சீனி சேர்க்காத பேரீட்சை மற்றும் பாதாம் முந்திரி பருப்பு சேர்த்து பூரணம் வைத்து செய்யும் போளி இது போகிக்கு போளி பண்ணவேண்டியிருப்பதால் இந்த போளி செய்து பாருங்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பூரணம் செய்வதற்கு தேவையானவை
  2. பேரீச்சம்பழம் - 3
  3. பாதாம் பருப்பு முந்திரி பருப்பு - தலா 10
  4. ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
  5. நெய் - 1 / 2 தேக்கரண்டி +போளி வாட்டி எடுப்பதற்கு தேவையான அளவு
  6. மேல் மாவிற்கு தேவையானவை
  7. கோதுமை மாவு - 1 / 4 கப் + 1 தேக்கரண்டி
  8. நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
  9. உப்பு - 1 சிட்டிகை
  10. மஞ்சள் பொடி - 1 சிட்டிகை

வழிமுறைகள்

  1. மேல் மாவிற்கு தேவையானவற்றை சேர்த்து தண்ணீர் விட்டு நெகிழ பிசைந்து எண்ணெய் விட்டு அப்படியே இரண்டு மணி நேரம் வைக்கவும்
  2. பாதாம் முந்திரி பருப்புகளை ஏலக்காய் பொடி சேர்த்து மிக்ஸியில் திரிக்கவும்
  3. பின்னர் பேரீட்சை சேர்த்து ஒரு சுற்று அரைத்து கையில் நெய் தடவி இரண்டு உருண்டையாக உருட்டி வைக்கவும்
  4. மேல் மாவையும் இரண்டாக உருட்டி வைக்கவும்
  5. உருண்டையை பட்டர் பேப்பர் /வாழை இலையில் கையால் சப்பாத்தி போல் தட்டிக்கொள்ளவும்
  6. அதன் மேல் நட்ஸ் உருண்டையை வைத்து மூடி கையால் மறுபடியும் தட்டிக்கொள்ளவும்
  7. தோசைகல்லில் நெய் விட்டு வாட்டி எடுக்கவும் அருமையான சீனியில்லா பேரீட்சை நட்ஸ் போளி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்