வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பழ புளிக்குழம்பு

Photo of Vazhaipazha PuliKuzhambu || Banana Curry by Vins Raj at BetterButter
592
4
0.0(0)
0

வாழைப்பழ புளிக்குழம்பு

Jan-16-2018
Vins Raj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பழ புளிக்குழம்பு செய்முறை பற்றி

இந்த குழம்பு வாழைப்பழம் மற்றும் குடை மிளகாயும் சற்று குழைந்து குழம்புடன் சேரும் போது ஒரு தனி சுவை கொடுக்கும். காரம், இனிப்பு, புளிப்பு மூன்றும் மற்றும் புது மஞ்சளின் மனமும் சேர்ந்து சுவை நாளங்களை திருப்தி படுத்தும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மொந்தன் வாழைப்பழம் 1
  2. முருங்கக்காய் 1
  3. சிறிய வெங்காயம் 10
  4. தக்காளி 2
  5. குடை மிளகாய் 1
  6. பூண்டு 10 பல்லு
  7. பச்சை மிளகாய் 2
  8. புளி 1 சிறிய நெல்லிக்காய் அளவு
  9. சாம்பார் தூள் 3 மே.க .
  10. மஞ்சள் துண்டு 2" நீளம்
  11. துருவிய தேங்காய் 1/2 கப்
  12. சீரகம் 1 தே.க.
  13. தாளிப்பு வடகம் 1மே.க .
  14. நல்லெண்ணெய் 2 1/2 மே.க .
  15. கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கிய 2 மே.க
  16. கருவேப்பிலை 1 குச்சி

வழிமுறைகள்

  1. வாழைப்பழத்தை வட்டமாகவும், முருங்கக்காய், தக்காளியையும் சிறிய துண்டுகளாகவும், குடைமிளகாயை பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாயை மஞ்சள் துண்டையம் ஒன்றாக உரலில் தட்டி, புளியை கரைத்து வைத்துக்கொள்ளவும்.
  2. வாணலியில் 1/2 தே.க எண்ணெய் சூடாக்கி அதில் வெங்காயம், தக்காளி, தட்டி வைத்துள்ள பச்சை மிளகாய், மஞ்சள் துண்டும் மற்றும் பூண்டை வதக்கவும்
  3. பின்னர் முருங்கக்காய் சேர்த்து 2 1/2 கப் தண்ணீர் விட்டு அதனுடன் சாம்பார் தூள், புளி கரைசலையுடன் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  4. கொதி வந்தவுடன் குடை மிளகாய் மற்றும் வாழைப்பழ துண்டுகளை போட்டு வேக விடவும்.
  5. தேங்காய் துருவலை சீரகத்துடன் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
  6. காய்கள் வெந்தவுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கலக்கி விட்டு கொதி வந்தவுடன் கொத்தமல்லி தழை போட்டு இறக்கி விடவும்.
  7. ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சூடாக்கி அதில் தள்ளிப்பு வடகம் மற்றும் கருவேப்பிலை போட்டு தாளித்து குழம்பில் ஊற்றவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்