யாக்னி புலாவ் ஷாஜஹானி | Yakhni Pulao Shahjahani in Tamil

எழுதியவர் Lubna Karim  |  27th Jul 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Yakhni Pulao Shahjahani by Lubna Karim at BetterButter
யாக்னி புலாவ் ஷாஜஹானிLubna Karim
 • ஆயத்த நேரம்

  15

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  60

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

904

0

யாக்னி புலாவ் ஷாஜஹானி recipe

யாக்னி புலாவ் ஷாஜஹானி தேவையான பொருட்கள் ( Ingredients to make Yakhni Pulao Shahjahani in Tamil )

 • 1 கிலோ மட்டன் கறித்துண்டுகள்
 • 1 கிலோ பாஸ்மதி அரிசி கழுவப்பட்டுத் தண்ணீர் ½ மணி நேரம் ஊறவைக்கப்பட்டது.
 • 200 கிராம் நெய்
 • 2 தேக்கரண்டி பாதாம் சாந்து
 • 200 கிராம் தயிர்
 • 3 குச்சி இலவங்கப்பட்டை
 • 2 தேக்கரண்டி மல்லித்தூள்
 • 2 தேக்கரண்டி கரம் மசாலா
 • 5 கிராம்பு
 • 1 தேக்கரண்டி மிளகு
 • 5 பச்சை ஏலக்காய்
 • 3 வெங்காயம் பொடியாக நறுக்கப்பட்டது
 • 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
 • ĵ கிலோ இஞ்சிப்பூண்டு விழுது
 • தாராளமான 1 சிட்டிகை குங்குமப்பூ
 • 2 தேக்கரண்டி சூடானப் பால்
 • 2 தேக்கரண்டி புதிய கொத்துமல்லி நறுக்கப்பட்டது
 • 1 தேக்கரண்டி புதிய புதினா இலைகள் நறுக்கப்பட்டது
 • உப்பு

யாக்னி புலாவ் ஷாஜஹானி செய்வது எப்படி | How to make Yakhni Pulao Shahjahani in Tamil

 1. சூடானப் பாலில் குங்குமப்பூவை உறவைத்து எடுத்துவைக்கவும்.
 2. ஒரு பாத்திரத்தில் பாதாம் சாந்து, தயிர், பாதி இஞ்சிப்பூண்டு விழுது, பாதி மல்லித்தூள், பாதி கரம் மசாலா, உப்பு, மிளகு, நறுக்கப்பட்ட பச்சை மிளகாய்களைச் சேர்க்கவும். நன்றாகக் கலந்து, கறித்துண்டுகளையும் சேர்க்கவும். மசாலாக்களால் நன்றாகப் பூசி மூடி வைக்கவும்.
 3. 6-8 கப் தண்ணீரைக் கொதி நிலைக்குக் கொண்டுவந்து மேலே குறிப்பிட்ட மேரினேட் செய்யப்பட் கறித்துண்டுகளைச் சேர்க்கவும். அவை மிருதுவாக மென்மையாக மாறும்வரை வேகவைக்கவும். மஸ்லின் துணி அல்லது வடிக்கட்டியைப் பயன்படுத்தித் தனியாக கவனமாக வடிக்கட்டிச் சேர்த்து வைக்கவும்.
 4. சேமித்து வைத்ததை தாளிப்பதற்கு:
 5. ஒரு கனமான அடிப்பாகம் உள்ள பாத்திரத்தை எடுத்து, 1 தேக்கரண்டி நெய் சேர்க்கவும், 2 கிராம்பு, மிளகு மற்றும் 3 தேக்கரண்டி பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயத்தைச் சேர்த்து வறுத்துக்கொள்ளவும். வெங்காயம் நன்றாகப் பொன்னிறமாகும்வரை வறுக்கவும். மேலே குறிப்பிட்டப் பொருளில் ஊற்றி 2 நிமிடங்கள் மூடி வைக்கவும். இது ‘யாகினி ’. என்று அழைக்கப்படும்.
 6. மேலே தயாரிக்கப்பட்ட யாக்கினியில் அரைவேக்காட்டு அரிசியை மீதமுள்ள இஞ்சிப்பூண்டு விழுது, உப்பு, கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டையோடு சேர்க்கவும்.
 7. வேறொரு கனமான அடிப்பாகமுள்ள பாத்திரத்தினை எடுத்து அடிப்பாகத்தைத் தாராளமாக நெய் ஊற்றவும். எடுத்து வைத்த கறித்துண்டுகளைச் சேர்த்து கரம் மசாலாவைத் தூவவும். சாதத்தை அதன் மீது வைக்கவும், கறி அடுக்கை மூட பரவச் செய்யவும்.
 8. மீதமுள்ள நெய், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை பாலில் ஊறவைத்தக் குங்குமப்பூவை பாலோடு சேர்க்கவும்.
 9. அதன் மீது சாதத்தை வைக்கவும். கறியை மூட பரவச்செய்யவும். புதிதான நறுக்கப்பட்ட கொத்துமல்லி புதினா இலைகளைப் பரவச் செய்யவும். தம்மில் 20-25 நிமிடங்கள் ஆறவிடவும். ஆறியதும் ரைத்தாவோடு பரிமாறவும்.

எனது டிப்:

தம்மில் எப்படிச் சமைப்பது? தம் என்றால் ‘சுவாசம் என்று பொருள்’. இந்தச் செயல்பாடு சமையலை நிறைவு செய்தபின்னர் தயாரிக்கப்பட்ட உணவை மேம்படுத்துவதில் ஈடுபடுகிறது. பாத்திரமானது முடிந்தளவு இறுக்கமாக அலுமினியத் தாளினால் அல்லது துணியினால் அல்லது மாவினால் இறுக்கமாக (கோதுமைமாவு, உப்பு மற்றம் தண்ணீரால் தயாரிக்கப்பட்டது) அல்லது கனமானக் கல் அல்லது எடையினால் மூடப்படுகிறது. இப்படிச் செய்தபின்னர், பாத்திரம் மிகக் குறைவானத் தீயில் வைக்கப்படுகிறது. திருமணம் அல்லது விழாக்களில், அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்கு சமைக்கும்போது, கொஞ்சம் கரியும் மூடியும் வைக்கப்படுகிறது. அப்போதுதான் உணவு சமமாக வேகும். இந்த நடைமுறையானது அங்கே அவற்றின் தனித்தன்மையான சுவையை வழங்குவதற்காக உணவின் தனித்தன்மையான சுவையை கலப்பதற்கு அனுமதிக்கிறது. பரிமாறுவதற்கு மட்டுமே பாத்திரம் திறக்கப்படவேண்டும்.

Reviews for Yakhni Pulao Shahjahani in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.