வீடு / சமையல் குறிப்பு / உருளை மீன் போண்டா

Photo of Potato n fish bonda by Margaret Charles at BetterButter
1003
7
0.0(0)
0

உருளை மீன் போண்டா

Jan-17-2018
Margaret Charles
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
9 மக்கள்
பரிமாறவும்

உருளை மீன் போண்டா செய்முறை பற்றி

எளிதில் செய்ய கூடிய பலகார வகை

செய்முறை டாக்ஸ்

  • ஸ்ரீலங்கன்
  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 9

  1. உருளைக்கிழங்கு 3 வேகவைத்தது
  2. சூரை மீன் (tuna) 200 கி உப்பு மஞ்சள் சேர்த்து வேகவைத்தது
  3. வெங்காயம் 1 சிறிதாக நறுக்கியது
  4. பச்சை மிளகாய் 2 சிறிதாக நறுக்கியது
  5. காஷ்மீரி மிளகாய் பொடி 1 தே க
  6. மல்லி பொடி 1/2 தே க
  7. மிளகு பொடி 1 தே க
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. எண்ணெய் பொரிப்பதற்கு
  10. முட்டை 1
  11. பிரெட் தூள் 1 கப்

வழிமுறைகள்

  1. ஓர் பாத்திரத்தில் எண்ணெய், முட்டை, பிரெட் தூள் தவிர எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  2. ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்
  3. ஒரு கிண்ணத்தில் பிரெட் தூளை வைக்கவும்
  4. செய்து வைத்த கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி முதலில் முட்டையில் தோய்த்து பின் பிரெட் தூளில் பிரட்டி எடுக்கவும்
  5. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  6. சுவையான உருளை மீன் போண்டா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்