வீடு / சமையல் குறிப்பு / உருளைகிழங்கு மசால் தோசை

Photo of Potato Masal Dosai by Krishnasamy Vidya Valli at BetterButter
364
6
0.0(0)
0

உருளைகிழங்கு மசால் தோசை

Jan-17-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உருளைகிழங்கு மசால் தோசை செய்முறை பற்றி

ஹோட்டல்களுக்கு செல்லும் போது எல்லோரும் விரும்பி சாப்பிடும் டிபன் வெரைட்டி இந்த மசால் தோசை ஒருவருக்கு இரண்டு வீதம் நான்கு பேர்களுக்கு கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு - 3
  2. தோசைமாவு - 8 குழம்பு கரண்டி
  3. பல்லாரி வெங்காயம் - 2
  4. கடலைமாவு - 1 தேக்கரண்டி
  5. உப்பு - 1 தேக்கரண்டி
  6. மஞ்சள் பொடி - 1 / 2 தேக்கரண்டி
  7. தாளிக்க
  8. கடுகு - 1 தேக்கரண்டி
  9. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  10. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  11. எண்ணெய் - 2 தேக்கரண்டி
  12. பெருங்காயம் - 2 சிட்டிகை
  13. கடலைப்பருப்பு-1/2தேக்கரண்டி
  14. பச்ச மிளகாய் - 2
  15. இஞ்சி - 1 சிறிய துண்டு
  16. தோசை வார்ப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. வெங்காயத்தை நீளவாக்கில் அல்லது ரவுண்டாக நறுக்கிவைக்கவும்
  2. உருளைகிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை போட்டுதாளித்து உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வெங்காயம் போட்டு வதக்கவும்
  4. உருளைகிழங்கை சேர்த்து நன்றாக வதக்கவும்
  5. கடலைமாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து விட்டு கரண்டியால் நன்றாக மசித்து செமிசாலிட் பதம் வந்ததும் சுருள கிளறி அடுப்பை அணைத்து விடவும்
  6. அடுப்பில் ஃபளாட் தோசைகல் போட்டு காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை எடுத்து லேசாக வார்க்கவும் பாதி வெந்ததும் ஒரு கரண்டி மசாலாவை பாதி பகுதியில் பரத்தி வைக்கவும்
  7. தோசை முறுமுறு என்று ஆனபின் மீதி தோசை பகுதியால் மூடி திருப்பி போட்டு பின்னர் தட்டில் வைத்து பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்