வீடு / சமையல் குறிப்பு / உருளை கிழங்கு மசாலா

Photo of Potato Masala / Poori Masala by Ramya Sambandam at BetterButter
46
5
0.0(0)
0

உருளை கிழங்கு மசாலா

Jan-17-2018
Ramya Sambandam
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உருளை கிழங்கு மசாலா செய்முறை பற்றி

சைட் டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளை கிழங்கு வேக வைத்தது 3
  2. வெங்காயம் பொடியாக நறுக்கியது
  3. தக்காளி பொடியாக நறுக்கியது
  4. இஞ்சி பூண்டு விழுது
  5. மிளகாய் தூள் தேவைக்கேற்ப
  6. உப்பு தேவையான அளவு
  7. மஞ்சள் தூள்
  8. கரம் மசாலா 1/2 டீஸ்பூன்
  9. கருவேப்பிலை
  10. கொத்தமல்லி பொடியாக நறுகியது
  11. பெருங்காயம் சிறிது
  12. கடுகு
  13. சீரகம்

வழிமுறைகள்

  1. வேக வைத்த உருளை கிழங்கு மசித்து தனியாக வைக்கவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிது கடுகு போட்டு வெடித்த உடன் சீரகம் சேர்க்கவும்
  3. பின் அதில் சிறிது கருவேப்பிலை போடவும், வெடித்தவுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. கொஞ்சம் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
  5. நன்கு பச்சை வாடை போகும் வரை வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்
  6. தக்காளி சிறிது வதங்கியவுடன் உப்பு, மஞ்சள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
  7. நன்கு வதங்கியவுடன் கரம் மசாலா மற்றும் மசித்த உருளை கிழங்கு சேர்த்து கலக்கவும்
  8. பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்
  9. உப்பு காரம் சரி பார்த்து தேவைப்பட்டால் சேர்த்து ஒரு 5 அல்லது 10 நிமிடம் சிம்மில் வைத்து கொதிக்கவிடவும்
  10. கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
  11. தேவைப்பட்டால் சிறிது எலுமிச்சை சாறு விடலாம்.
  12. பூரி அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்