வீடு / சமையல் குறிப்பு / Paneer Stuffed Potato Gulab Jamun

Photo of Paneer Stuffed Potato Gulab Jamun by Ayesha Ziana at BetterButter
857
11
0.0(1)
0

Paneer Stuffed Potato Gulab Jamun

Jan-17-2018
Ayesha Ziana
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளை கிழங்கு 2 மீடியம் சைஸ்
  2. கோதுமை மாவு 4 முதல் 5 டேபிள் ஸ்பூன்
  3. சோடா உப்பு ஒரு சிட்டிகை
  4. எண்ணெய் பொரிக்க
  5. ஸ்டப்பிங் செய்ய: துருவிய பனீர் 1/4 கப் அல்லது தேவைக்கு
  6. கோதுமை மாவு 2 டேபிள் ஸ்பூன்
  7. ரோஸ்மில்க் எஸ்ஸென்ஸ் சில துளிகள்
  8. சீனி பாகு செய்ய: சீனி 3/4 கப்
  9. தண்ணீர் 3/4 கப்
  10. ஏலக்காய் 1
  11. எலுமிச்சை சாறு/வினிகர் சில துளிகள்

வழிமுறைகள்

  1. உருளை கிழங்கை குக்கரில் 10 விசில் வேக வைத்து, தோல் உரித்து, கேரட் துருவியில் வைத்து துருவி, கட்டிகளில்லாமல் மசித்து கொள்ளவும்.
  2. பின்னர், கிழங்குடன் கோதுமை மாவு, சோடா உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்(கோதுமை மாவு தேவைக்கேற்ப சேர்க்கவும்). பின்னர் 5 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
  3. அதன் பின்னர் பிசைந்த மாவை உருண்டைகளாக உருட்டவும்.
  4. ஸ்டப்பிங் செய்ய: கொடுத்துள்ளவற்றை நன்றாக பிசைந்து, கொண்டை கடலை அளவு உருண்டைகளாக உருட்டவும். 5 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
  5. சீனி பாகு செய்ய: சீனியும் தண்ணீரும் சேர்த்து கொதிக்க விடவும். லேசாக ஒட்டும் பதம் வந்ததும், தட்டிய ஏலக்காய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அடுப்பை அணைக்கவும்.
  6. ஜாமூன் செய்ய: உருட்டி வைத்த உருளைக்கிழங்கு மாவில் இருந்து ஒரு உருண்டை எடுத்து, அதனுள்ளே ஸ்டப்பிங்கில் இருந்து ஒரு உருண்டை எடுத்து வைத்து, நன்றாக பொதிந்து கொள்ளவும். பின்னர், சூடான எண்ணெயில் பொரித்து, சூடான சீனி பாகில் போடவும்.
  7. ஜாமூன் பாகில் நன்றாக ஊறியதும், எடுத்து பரிமாறவும்.
  8. சூப்பரான சத்தான பனீர் அடைத்த உருளை கிழங்கு ஜாமூன் தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-18-2018
Pushpa Taroor   Jan-18-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்