வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு பால் குருமா

Photo of Potato milk kuruma by Sowmya Sundar at BetterButter
435
4
0.0(0)
0

உருளைக்கிழங்கு பால் குருமா

Jan-18-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு பால் குருமா செய்முறை பற்றி

அதிகம் காய்கறிகள் இல்லாத மழை நேரத்தில் கைகொடுக்கும் இந்த அருமையான உருளைக்கிழங்கு பால் குருமா .சப்பாத்தி பூரி சாதம் அனைத்திற்கும் ஏற்ற எண்ணெய் குறைவான டிஷ் இது. ஈசியாக 20நிமிடங்களில் தயார் செய்து விடலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பெரிய உருளைக்கிழங்கு -3
  2. வெங்காயம் -1
  3. தக்காளி -1
  4. பச்சை பட்டாணி -ஒரு கைப்பிடி
  5. காய்ச்சிய பால் -1/2 கப்
  6. எண்ணெய்-1டேபிள் ஸ்பூன்
  7. கடுகு சீரகம் -தாளிக்க
  8. உப்பு தேவையான அளவு
  9. கொத்தமல்லி தழை -சிறிது
  10. அரைக்க
  11. தேங்காய் துருவல் -1/4 கப்
  12. பொட்டுக்கடலை -1 டேபிள் ஸ்பூன்
  13. பச்சை மிளகாய்-3 அல்லது4
  14. சோம்பு-1 டீஸ்பூன்
  15. கசகசா-1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை தோல் சீவி சதுரங்களாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  2. குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சீரகம் தாளித்து வெங்காயம் தக்காளி உருளைக்கிழங்கு மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து 3 நிமிடம் வரை நன்கு வதக்கவும்
  3. பின்னர் அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வரை வேக விடவும்.
  4. அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும்
  5. குக்கரை திறந்ததும் அரைத்த விழுதை சேர்த்து சில நிமிடங்கள் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து பின்னர் பால் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்