Photo of Aloo gulob jamun (easy method) by Adaikkammai Annamalai at BetterButter
806
19
0.0(8)
0

Aloo gulob jamun (easy method)

Jan-18-2018
Adaikkammai Annamalai
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • சௌத்இந்தியன்
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளை கிழங்கு - 2 பெரிது
  2. மைதா - 1 1/4 கப்
  3. பால் பவுடர் - 3/4 கப்
  4. பேக்கிங் சோடா - 1/2 ஸ்பூன்
  5. உருக வைத்த நெய் சிறிது ஒட்டாமல் இருக்க
  6. சர்க்கரை - 2 1/4 கப்
  7. பால் - 1/2 கப்
  8. தண்ணீர் - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் உருளையை 4 ஆக கட் செய்து குக்கரில் சேர்த்து வேக விடவும்.
  2. குக்கரில் 4 சவுண்ட் 5 நிமிடம் வைத்து இறக்கவும் . நன்றாக குழைவாக வெந்த பின் இறக்கவும்.
  3. தண்ணியை வடிகட்டி உருளையை எடுத்து கொள்ளவும்.
  4. தோலை உரித்து எடுத்து உருளைகிழங்கை நன்றாக மசித்து எடுத்து கொள்ளவும்.
  5. இப்பொழுது மாவு பிசைய தேவையான பொருட்களை எடுத்து கொள்ளவும். மசித்து உருளை, மைதா, பால் பவுடர, பேக்கிங் சோடா, சிறிது உருக வைத்த நெய் ஒட்டாமல் இருக்க எடுத்து கொள்ளவும்.
  6. முதலில் மசித்த உருளையுடன் பால் பவுடரை சேர்த்து கட்டியில்லாமல் பிசையவும்.
  7. அதனுடன் பேக்கிங் சோடா மற்றும் மைதாவை சேர்க்கவும்.
  8. ஒட்டாமல் இருக்க சிறிது உருக்கிய நெய் விட்டு பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு எடுத்து கொள்ளவும்
  9. ஒரு 15 நிமிடம் தனியாக வைக்க வேண்டும்.
  10. இன்னொரு பக்கம் ஒரு அகல பாத்திரத்தில் சர்க்கரையை 2 கப் சேர்த்து அதில் ஜீராக்கு தேவையானஅளவு தண்ணீர் சேர்த்தால் போதும்.
  11. பாகு வர தேவை இல்லை ., சர்க்கரை கரைந்து கொதித்தால் போதும். பிசு பிசு வென்று வந்தவுடன் கொதித்தவுடன் 1/ 2 கப் காய்ச்சிய பால் சேர்த்து கொதிக்க விடவும்
  12. நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும். பால் சேர்ப்பதனால் சர்க்கரையில் உள்ள் அழுக்கை (dust) நீக்கி பால் பிரித்து விடும்.
  13. இறக்கி, ஊற வைப்பதற்கு அகல பௌலில் துணி வடிக்கட்டியை வைத்து வடிக்கட்டி எடுத்து கொள்ளவும்.
  14. ஜீரா தயார்.
  15. இப்பொழுது பிசைந்து் வைத்த மாவை எடுத்து கையில் உருக்கிய நெய் தொட்டு மாவை எடுத்து குட்டியாக உருண்டையாக உருட்டி தட்டில் அடுக்கவும்.
  16. அனைத்து மாவையும் உருட்டி எடுத்து கொள்ளவும்.
  17. எண்ணெயை காய வைத்து ரொம்ப சூடாகமல் லேசாக சூடு வந்தவுடன் 5 அல்லது 6 உருண்டையை எண்ணெயில் போடவும்.
  18. திருப்பி திருப்பி போட்டு, கருக விடாமல் பொரித்து எடுக்கவும் .
  19. அதை பொன்னிறமாக பொரித்து எடுத்து ஜீராவில் போடவும்.
  20. தேவையான டாபிங்க்ஸ் ஏலக்காய் மற்றும் பாதாம் போல் மேலே தூவி சுவைக்கலாம்
  21. சுவையான ஆளு குளோப் ஜாமுன் தயார்

மதிப்பீடு (8)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Anand Ramamorthy
Jan-22-2018
Anand Ramamorthy   Jan-22-2018

Wowwww

Kalyani
Jan-19-2018
Kalyani   Jan-19-2018

Delicious

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்