வீடு / சமையல் குறிப்பு / Aloo okra Mandi (Andhra style spicy side dish)

Photo of Aloo okra Mandi  (Andhra style spicy side dish) by Adaikkammai Annamalai at BetterButter
921
15
0.0(7)
0

Aloo okra Mandi (Andhra style spicy side dish)

Jan-18-2018
Adaikkammai Annamalai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஆந்திரப்ரதேஷ்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளை கிழங்கு - 2
  2. கோணலாக நறுக்கிய வெண்டைக்காய் - 10
  3. நீட்டமாக நறுக்கிய கத்திரிக்காய் - 4
  4. குண்டாக நறுக்கிய வெங்காயம் - 2
  5. தக்காளி - 1/2
  6. நாளாக நறுக்கிய பச்சைமிளகாய் - 6
  7. இரண்டாக கிள்ளிய வரமிளகாய் - 4
  8. எண்ணெய் --5 ஸ்பூன்
  9. கடுகு - 1/2 ஸ்பூன்
  10. உளுந்து - 1 ஸ்பூன்
  11. வெந்தயம் - சிறிது
  12. சோம்பு - 1/2 ஸ்பூன்
  13. சீரகம் - 1/2 ஸ்பூன்
  14. கருவேப்பிலை - சிறுது
  15. அரிசி கலைந்த தண்ணீர் இல்லைஎன்றால் அல்லது போதவில்லை யென்றால் சோள மாவு - 1 ஸ்பூன்
  16. புளி - நெல்லிக்காய் அளவு
  17. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் அனைத்து பொருளையும் நறுக்கி இடித்து கொள்ளவும்
  2. பின் வெண்டைக்காய் மட்டும் முதலில் தனியாக எண்ணெய் ஊற்றி வதக்கி எடுத்து கொள்ளவும். ஏனென்றால் வெண்டைக்காய் பிசு பிசுவென்று வரும் அதனால் தனியாக வதாக்கினால் அது இருக்காது..
  3. நன்றாக அந்த பிசு பிசு இல்லாமல் வரும் வரை வதக்கவும். ஒரு 15 நிமிடம் அடுப்பில் புள்ளில் வைத்து
  4. அதன் பின் நன்றாக வதக்கி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்
  5. அடுத்ததாக ஒரு நான் ஸ்டிக் பேனில் 6 ஸ்பூன் என்னை விட்டு கடுகு.. உளுந்து.. சோம்பு.. சீரகம்... வேண்டஹயம்.. கருவேப்பிலை.. போட்டு பொரிய விடவும்
  6. அதன் பின் நறுக்கி வைத்த வெங்காயம் ..தாக்களி .. பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்
  7. அதனோடு தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்ககவும் பொன்னிறமாக
  8. வதக்கிய பின் நறுக்கிய வைத்த உருளையோட .., கத்திரிக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்
  9. அடுத்தாக 4 வரமிளகாய் கிள்ளி நடுவில் போடவும்
  10. அரிசி களைந்து எடுத்து வைத்த தண்ணீரில் புளி சேர்த்து கரைத்து எடுத்து கொள்ளவும்
  11. கரைத்து எடுத்து வைத்த புளி தண்ணீரை வதக்கிய காய்கறிகளுடன் வடிக்கட்டி சேர்க்கவும் இதே போல்
  12. புளி தண்ணீரை சேர்த்து மூடி வைத்து கொதிக்க வைத்து காய்கறிகளை வேக விடவும் 20 நிமிடம். உருளை வேகும் வரை,
  13. உருளை கிழங்கு வெந்தவுடன் நறுக்கி வைத்த வெண்டைக்காய் சேர்க்கவும்
  14. வெண்டைக்காய் சாரும் வரை குலையாமல் சற்று நேரம் கொதிக்கவிடவும்
  15. அரிசி கலைந்ததண்ணீர் கெட்டியாக இல்லையென்றால் அல்லது போதவில்லை என்றால் 1/4 ஸ்பூன் சோள மாவு சேர்த்து கட்டி படமால் போட்டவும்
  16. நன்றாக கலக்கி கொதிக்கவிடவும் சிறிது தண்ணீர் ஊத்தி கொதிக்க மூடி வைத்து விடவும்
  17. சிறிது நேரம் கழித்து வெண்டைக்காய் குலையாமல் சேர்ந்தவுடன் இறக்கி பரிமாறவும் உப்பு தேவையென்றால் சேர்த்து ருசி பார்த்து சேர்த்து இறக்கவும்
  18. சுவையான ஆளு ஓக்ரா ஆந்திரா ஸ்டைல் மண்டி தயார்

மதிப்பீடு (7)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Sundareswaran Chettiar
Feb-05-2018
Sundareswaran Chettiar   Feb-05-2018

Tried this one, turned out great !!!

Jothi
Jan-23-2018
Jothi   Jan-23-2018

Spicy

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்