வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு பறவைக் கூடு

Photo of Potato birds nest by saranya sathish at BetterButter
377
8
0.0(0)
0

உருளைக்கிழங்கு பறவைக் கூடு

Jan-18-2018
saranya sathish
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு பறவைக் கூடு செய்முறை பற்றி

உருளைக்கிழங்கு, சேமியா வைத்து செய்த பறவைக் கூடு போன்ற சிற்றுண்டி. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு – 4
  2. பச்சைப் பட்டாணி – சிறிதளவு
  3. மைதா மாவு – 1/4 கப்
  4. சோள மாவு – 1 டீஸ்பூன்
  5. உப்பு - தேவையான அளவு
  6. சேமியா - 1/2 கப்
  7. எண்ணெய்
  8. இட்டாலியன் சீசனிங் - 1/2 ஸ்பூன்
  9. சில்லி பிலேக்ஸ் - சிறிது
  10. மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை உப்பு சேர்த்து முக்கால் பதத்தில் வேக வைத்து பின் தோல் உரித்து வைக்கவும்.
  2. மைதா மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், உப்பு, சில்லி பிலேக்ஸ், சீசனிங் ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். 
  3. பட்டாணி சிறிது நேரம் வேகவைத்து பின் சிறிது எண்ணெயில் வதக்கி வைக்கவும்.
  4. உருளைக்கிழங்கை எடுத்து ஸ்பூனால் பள்ளம் போல் செய்து கொள்ளவும்.
  5. பின்னர் மைதா கலவையில் முக்கி எடுத்து சேமியாவில் புரட்டி எண்ணெயில் பொரிதெடுக்கவும். 
  6. உருளைக்கிழங்கில் நடுவில் வதக்கிய பட்டாணியை வைத்து கொத்தமல்லி இலை தூவி சாஸ் வைத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்