வீடு / சமையல் குறிப்பு / ஆலு பராத்தா

Photo of Aaloo Paratta by Adhi Venkat at BetterButter
509
5
0.0(0)
0

ஆலு பராத்தா

Jan-18-2018
Adhi Venkat
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆலு பராத்தா செய்முறை பற்றி

வட இந்திய உணவான “ஆலு பராத்தா” என்பது, ஒரு ஸ்டஃப்ட் சப்பாத்தி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு – 1கப்
  2. உருளைக்கிழங்கு – 3 (பெரியது)
  3. உப்பு – தேவையான அளவு
  4. மிளகாய்த்தூள் – ½ தேக்கரண்டி
  5. தனியாத்தூள் – 1 தேக்கரண்டி
  6. கரம் மசாலா – ¼ தேக்கரண்டி
  7. மஞ்சள் தூள் – சிறிதளவு
  8. கொத்தமல்லி  இலைகள் –சிறிதளவு
  9. எண்ணெய் (அ) நெய் – தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கோதுமை மாவை தண்ணீர் சேர்த்து பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு தயார் செய்து கொள்ளவும். 
  2. உருளைக் கிழங்கை குக்கரில் வேக வைத்துக்கொள்ளவும். ஆறியதும் தோலை உரித்து மசித்துக் கொள்ளவும்.
  3. அத்துடன் உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இது தான் ஸ்டஃப் செய்ய வேண்டிய பூரணம்.
  4. பிசைந்து வைத்துள்ள சப்பாத்தி மாவை பெரிய எலுமிச்சையளவு உருண்டைகளாக செய்து வைத்துக் கொள்ளவும்.
  5. ஒரு உருண்டையை எடுத்து சிறிய சப்பாத்தியாக திரட்டிக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டியளவு உருளைக்கிழங்கு மசாலா கலவையை வைத்து மூடி, மாவை தொட்டுக்கொண்டு பராத்தாவாக திரட்டவும்.
  6. எவ்வளவு மெலிதாக செய்ய முடியுமோ செய்யலாம். சூடான தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணையோ அல்லது நெய்யோ விட்டு வாட்டி எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்