வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு பீட்சா க்ரஸ்ட்

Photo of Potato pizza crust by saranya sathish at BetterButter
232
8
0.0(0)
0

உருளைக்கிழங்கு பீட்சா க்ரஸ்ட்

Jan-18-2018
saranya sathish
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு பீட்சா க்ரஸ்ட் செய்முறை பற்றி

வேகவைத்த உருளைக்கிழங்கு, ஆரோரூட் பவர் வைத்து செய்த பீட்சா.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2
  2. மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன்
  3. ஆரோரூட் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
  4. சில்லி பிலேக்ஸ் - 1/4 ஸ்பூன்
  5. இட்டாலியன் சீசனிங் - 1/2 ஸ்பூன்
  6. உப்பு
  7. ஆலிவ் எண்ணெய்
  8. நீல வாக்கில் நருக்கிய வெங்காயம் - 1
  9. நீல வாக்கில் நருக்கிய குடைமிளகாய் - 1
  10. நீல வாக்கில் நருக்கிய தக்காளி - 1
  11. பன்னீர் - 1 சிறிதாக நருக்கியது
  12. துருவிய சீஸ் - சிறிது
  13. தக்காளி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மசித்த கிழங்கு, ஆரோரூட் பவுடர், மைதா, உப்பு சிறிது சீசனிங் சேர்த்து தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  2. சாப்டான சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும். அழுத்தி பிசைய வேண்டாம்.
  3. ஓவனை 180° இல் 10 நிமிடம் சூடு செய்யவும்.
  4. வட்டமான டிரே ஒன்றில் பேக்கிங் பேப்பர் வைத்து பின் பிசைந்து வைத்த மாவு உருண்டையை வைத்து வட்டமாக தட்டவும்.
  5. தக்காளி சாஸ்ஸை பீட்சா முழுவதும் தடவி விடவும்.
  6. பின் மேலே நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் பனீரை வைக்கவும்.
  7. பின்னர் அதற்கு மேலே துருவிய சீஸ், சில்லி பிலேக்ஸ், சீசனிங் தூவிவிடவும்.
  8. பின் சிறிது எண்ணெய்யை ஸ்பிரே செய்யவும்.
  9. பின்னர் டிரேயை ஓவனில் வைத்து 30 நிமிடம் பேக் செய்யவும். பின் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்