Photo of Baby Potato Fry by Priya Tharshini at BetterButter
1131
6
0.0(1)
0

Baby Potato Fry

Jan-18-2018
Priya Tharshini
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பேபி உருளைகிழங்கு - 12
  2. எண்ணெய் - 2 + 2 மேசைக்கரண்டி
  3. கடுகு - 1 தேக்கரண்டி
  4. கருவேப்பிலை - சிறிதளவு
  5. தண்ணீர் - 3 மேசைக்கரண்டி
  6. உப்பு - தேவைக்கு
  7. பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
  8. சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி
  9. தனியா பொடி - 1/2 தேக்கரண்டி
  10. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  11. சீரக தூள் - 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பேபி உருளைக்கிழங்கை நன்கு கழுவி குக்கரில் 4 விசில் வேகவைக்கவும்.
  2. விசில் அடங்கியதும், உருளைகிழங்கு தோலை உரிக்கவும்.
  3. டூத் பிக் வைத்து உருளைக்கிழங்கை சிறிய ஓட்டைகள் போடவும். பார்த்து செய்யவும் உடைந்து விடகூடாது.
  4. பாத்திரத்தில் உப்பு,பெருங்காயம், மஞ்சள் தூள்,சாம்பார் பொடி, தனியா பொடி மற்றும் சீரக தூள் சேர்க்கவும்.
  5. அத்துடன் 2 மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்து கலக்கவும்.
  6. அத்துடன் உருளைக்கிழங்கை சேர்த்து கலக்கவும்.
  7. 1/2 மணி நேரம் ஊற விடவும்.
  8. கடாயில் மீதம் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு,கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  9. மசாலா தடவிய உருளைக்கிழங்கை சேர்த்து கலக்கவும். தண்ணீர் சேர்த்து மீதம் மசாலாவை கழுவி உருளைக்கிழங்குடன் சேர்க்கவும்.
  10. மிதமான சூட்டில் பத்து நிமிடம் வறுக்கவும். பொன் நிறம் ஆனதும் அடுப்பை அணைக்கவும்.
  11. பேபி உருளைக்கிழங்கு வருவல் தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Juvaireya R
Jan-19-2018
Juvaireya R   Jan-19-2018

Mouth watering

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்