Photo of Schezwan potato semi Gravy by Yasmin Shabira at BetterButter
637
9
0.0(1)
0

Schezwan potato semi Gravy

Jan-18-2018
Yasmin Shabira
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு : 4
  2. சோள மாவு : 2 மேசைக்கரண்டி + 1 தேக்கரண்டி
  3. வெங்காயம் : 1
  4. குடை மிளகாய் : 1
  5. இஞ்சி பூண்டு விழுது : 1 மேசை கரண்டி
  6. வரமிளகாய் : 5
  7. தக்காளி சாஸ் : 1 தேக்கரண்டி
  8. கரம் மசாலா : 1/2 தேக்கரண்டி
  9. மல்லி தழை : 1 கைப்பிடி
  10. எண்ணெய் : பொறித்தெடுக்க + 2 மேசைக்கரண்டி
  11. உப்பு : ருசிக்கேற்ப

வழிமுறைகள்

  1. மிளகாயை 5 நிமிடம் தண்ணீரில் கொதிக்க விட்டு எடுத்து பேஸ்ட் ஆக அரைத்து கொள்ளவும்
  2. உருளைக்கிழங்கை தோல் நீக்கி நீளமாக ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸுக்கு போல நறுக்கி கொள்ளவும்
  3. அதில் சோள மாவு மற்றும் சிறிது உப்பு சேர்த்து பிரட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூண்டு சேர்க்கவும்...
  5. பிறகு வெங்காயம் குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  6. அரைத்து வைத்த மிளகாய் பேஸ்ட், தக்காளி சாஸ், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
  7. 1 தேக்கரண்டி சோள மாவை கால் கப் அளவு தண்ணீரில் கரைத்து சேர்த்து கொதிக்க விடவும்
  8. கலவை நன்றாக கொதித்து வரும் போது பொரித்த உருளைக்கிழங்கு சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க விட்டு மல்லிதழை தூவி இறக்கவும்...
  9. சுவையான செஸ்வான் பொடேடோ க்ரேவி தயார்...!!!
  10. உங்களுக்கு க்ரேவியாக இல்லாமல் ட்ரையாக வேண்டும் என்றால் சோள மாவை தண்ணீரில் கரைத்து சேர்க்க வேண்டாம்...

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Adaikkammai Annamalai
Jan-19-2018
Adaikkammai Annamalai   Jan-19-2018

Wow.. mouth watering

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்