வீடு / சமையல் குறிப்பு / மட்டன் தம் பிரியாணி

Photo of Mutton Dum Briyani by Asiya Omar at BetterButter
456
5
0.0(0)
0

மட்டன் தம் பிரியாணி

Jan-18-2018
Asiya Omar
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

மட்டன் தம் பிரியாணி செய்முறை பற்றி

பொதுவாக நான் செய்யும் முறையை படிப்படியாக படத்துடன் விளக்கியிருக்கிறேன்.செய்து பார்க்கவும்.சுவைக்கு நான் கேரண்ட்டி.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • ஈத்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. மட்டன் - 1.1/4 கிலோ
  2. பாசுமதி அரிசி -1 கிலோ
  3. இஞ்சி பூண்டு விழுது -4 மேஜைக்கரண்டி
  4. மிளகாய்த்தூள் - 3 தேக்கரண்டி
  5. கரம் மசாலா -2 தேக்கரண்டி( ஏலம் பட்டை கிராம்புத்தூள்)
  6. தயிர் -200 மில்லி
  7. வெங்காயம் நறுக்கியது -400 கிராம்
  8. தக்காளி நறுக்கியது -400 கிராம்
  9. பச்சை மிளகாய் -8
  10. மல்லி,புதினா தலா ஒரு கட்டு
  11. எலுமிச்சை -1
  12. எண்ணெய் - 150 மில்லி
  13. நெய் -100 -125 மில்லி
  14. ஏலக்காய் 5,கிராம்பு -5,பட்டை -2,பிரியாணி இலை,நட்சத்திர மொக்கு,அன்னாசிப்பூ1.
  15. சாப்ரான் 2 பின்ச் அல்லது லெமன் எல்லோ கலர்
  16. ஆரஞ்சு ரெட் கலர் - ஒரு பின்ச் ( கரைக்க)
  17. உப்பு - தேவைக்கு.

வழிமுறைகள்

  1. நறுக்க வேண்டியவைகளை தயார் செய்யவும்.மட்டனுடன் ,பாதி எலுமிச்சை பழம்,மிளகாய்த்தூள் ஒரு தேக்கரண்டி,இஞ்சி பூண்டு ஒரு மேஜைக்கரண்டி,அரை தேக்கரண்டி கரம் மசாலா,தேவைக்கு உப்பு சேர்த்து ஊற வைக்கவும்.
  2. இஞ்சி பூண்டு அரைத்து,கரம் மசாலா தயாராய் இருக்கட்டும்.சாப்ரான் கலர் பாலில் கரைத்து வைக்கவும்.
  3. அரிசி கழைந்து1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  4. குக்கரில் ஊற வைத்த கறியை மூன்று விசில் வைத்து இறக்கவும்.
  5. பிரியாணி செய்யும் பாத்திரத்தில் எண்ணெய் நெய் விடவும்.ஏலம்,பட்டை,கிராம்பு,பிரியாணி இலை,அன்னாசிப்பூ,நட்சத்திர மொக்கு சேர்த்து பொரிய விடவும்.
  6. நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  7. பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு 3 மேஜைக்கரண்டி குவியலாகச் சேர்க்கவும்.கரம் மசாலா சேர்க்கவும்.
  8. அடுப்பை சிம்மில் வைத்து வதக்கவும்.
  9. நன்கு வதங்கியதும் நறுக்கிய மல்லி புதினா சேர்க்கவும்.நன்றாக வதக்கவும்.
  10. நறுக்கிய தக்காளி,மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  11. உப்பு தேவைக்கு சேர்த்து வதங்க விடவும்.மிளகாய்த்தூள் சேர்க்கவும்.சிறிது சிம்மில் வைத்து மூடி திறக்கவும்.
  12. வேக வைத்த மட்டன் சேர்க்கவும்.
  13. தயிர் சேர்த்து பிரட்டி விடவும்.
  14. மூடி சிறிது சிம்மில் விடவும்.உப்பு,புளிப்பு சரி பார்த்துக் கொள்ளவும்.
  15. வேறொரு பெரிய பாத்திரத்தில் தாராளமாக ஒரு கிலோ அரிசி கொதிக்கும் அளவு தண்ணீர் கொதிக்க விடவும்.தேவைக்கு உப்பு சேர்க்கவும்.சிறிது மல்லி,புதினா சேர்க்கவும்.உப்பு சரியாக இருக்க வேண்டும்.
  16. முக்கால் பதம் வெந்ததும் ஒரு வடிதட்டில் வடிக்கவும்.கஞ்சியை தனியாக எடுத்து வைக்கவும்.
  17. கறி நன்கு மசாலாவுடன் ஒன்று சேர்ந்து எண்ணெய் மேலே வரும்.வடித்த முக்கால் பதம் வெந்த அரிசியை தட்டவும்.பாதி எலுமிச்சையை பரவலாக பிழியவும். சாப்ரான் கரைசல்,ஆரஞ்சு ரெட் கலர் கரைசல் தெளிக்கவும்.விரும்பினால் சிறிது நெய் சேர்க்கலாம்.
  18. மூடி அலுமினியம் பாயில் கவர் செய்து மூடி போட்டு மூடவும்,கீழே ஒரு பழைய தோசைக்கலத்தை வைக்கவும்.அடி பிடிக்காமல் இருக்கும்..மேலே வெயிட்டிற்கு வடித்த கஞ்சியை வைக்கவும்.
  19. இருபது நிமிடம் அடுப்பை மிகக் குறைத்து தம் போடவும்.
  20. அடுப்பை அணைத்து ,10 நிமிடம் கழித்து திறக்கவும்.
  21. கீழிருந்து மேலாக சோறு உடையாதவாறு பிரட்டவும்.ஒரு போல் பிரட்டி மூடவும்.சாப்பிடும் நேரம் எடுத்து பரிமாறவும்.
  22. சுவையான மட்டன் தம் பிரியாணி தயார்.பக்க உணவுகளுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்