முட்டையில்லாத முழு கோதுமை மாவு கேக் | Eggless Whole Wheat Flour Cake in Tamil

எழுதியவர் Kartikeya Mishra  |  12th Feb 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Eggless Whole Wheat Flour Cake by Kartikeya Mishra at BetterButter
முட்டையில்லாத முழு கோதுமை மாவு கேக்Kartikeya Mishra
  • ஆயத்த நேரம்

    20

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    40

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    8

    மக்கள்

4598

0

முட்டையில்லாத முழு கோதுமை மாவு கேக் recipe

முட்டையில்லாத முழு கோதுமை மாவு கேக் தேவையான பொருட்கள் ( Ingredients to make Eggless Whole Wheat Flour Cake in Tamil )

  • 150 கிராம் முழு கோதுமை மாவு
  • 90 கிராம் வெண்ணெய்
  • 1 தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ்
  • 400 கிராம் சுண்டக் காய்ச்சிய பால்
  • 1.5 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
  • 1/4 கப் + 2 தேக்கரண்டி தண்ணீர்

முட்டையில்லாத முழு கோதுமை மாவு கேக் செய்வது எப்படி | How to make Eggless Whole Wheat Flour Cake in Tamil

  1. உங்கள் கேக் டின்னில் கொஞ்சம் வெண்ணெய் மற்றும் மாவால் தடவிக்கொள்ளவும்.
  2. ஒரு கிண்ணத்தில், வெண்ணெய், சுண்டக்காய்ச்சியப் பால் வெண்ணிலா எசென்சை அடித்துக்கொள்ளவும்.
  3. பேக்கிங் பவுடர், முழு கோதுமை மாவை வேறொரு பாத்திரத்தில் சேர்த்துக் கலந்துகொள்ளவும்.
  4. ஒரு 5 லிட்டர் பிரஷர் குக்கரில் (அல்லது பெரியதில்) 1-2 கப் உப்பைச் சேர்த்துக்கொள்ளவும். அதன் மீது ஒரு உயர் ரேக் அல்லது ஓட்டையுள்ள தட்டை வைக்கவும். குக்கரை மிதமானச் சூட்டில் சூடுபடுத்திக்கொள்க. மூடியை அதன் மீது வைத்து விசிலை எடுத்துவிடவும்.
  5. 1/2 மாவையும் கொஞ்சம் தண்ணீரையும் சேர்த்து மெதுவாகக் கலந்துகொள்க. மீதமுள்ள மாவையும் தண்ணீரையும் சேர்த்து மென்மையான அடர்த்தியான மாவைத் தயாரித்துக்கொள்க.
  6. மாவைத் தயாரித்து வைத்துள்ள கேக் டின்னில் ஊற்றி இந்த டின்னை சூடானக் குக்கரில் கவனமாக வைக்கவும். தீயை மிதமான நிலையில் முதல் 2-3 நிமிடங்கள் வைத்து குறைத்து 35 நிமிடங்கள் பேக் செய்யவும்.
  7. 35 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு கத்தியை நுழைத்துச் சோதித்துப் பார்க்கவும். சுத்தமாக வந்தால் உங்கள் கேக் வெந்துவிட்டது என்று பொருள்.
  8. கொஞ்சம் சாக்லேட் சிரப்பை கேக் துண்டுகள் மீது ஊற்றிப் பரிமாறவும். சூடாக இருக்கும் போது பரிமாறுவது சிறப்பாக இருக்கம்!

எனது டிப்:

கேக் டின் குக்கரின் பக்கங்களோடு நேரடியாகத் தொடர்பில் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.

Reviews for Eggless Whole Wheat Flour Cake in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.