Photo of Potato Palmsugar Burfi by Ayesha Ziana at BetterButter
411
13
0.0(1)
0

Potato Palmsugar Burfi

Jan-19-2018
Ayesha Ziana
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஸாட்டிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு 1
  2. கருப்பட்டி 1/3 கப் அல்லது தேவைக்கேற்ப
  3. துருவிய தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்
  4. தட்டிய ஏலக்காய் 1
  5. நெய் 2 ஸ்பூன் நிறைய
  6. சோள மாவு 3 ஸ்பூன்
  7. துருவிய பாதாம் அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை தோல் சீவி, கேரட் துருவியில் துருவி தண்ணீரைப் பிழிந்து கொள்ளவும். பின் சோள மாவில் போட்டு பிரட்டவும்.
  2. வாணலியில் நெய் ஊற்றி உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  3. கருப்பட்டியைத் தனியாக சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிக்கட்டி கொள்ளவும். இதையும் கிழங்குடன் சேர்த்து கிளறவும்.
  4. கலவை ஓரளவு கெட்டியாகி வந்ததும் தேங்காய் சேர்த்து மீண்டும் கிளறி கொண்டே இருக்கவும்.
  5. இறுதியாக கலவை வாணலியில் ஒட்டாமல் வந்ததும் தட்டிய ஏலக்காய் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
  6. பின்னர் நெய் தடவிய சிறு தட்டில் கொட்டி, இளஞ்சூடாக இருக்கும்போதே துண்டுகள் கீறி வைக்கவும். துருவிய பாதாமையும் தூவவும். ஆறியதும் துண்டுகளைப் பரிமாறவும்.
  7. சூப்பரான உருளை கருப்பட்டி பர்பி தயார். குழந்தைகளுக்கு மிகவும் சத்தானதும் கூட.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-19-2018
Pushpa Taroor   Jan-19-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்