வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு பேன்கேக்

Photo of Potato pancake by saranya sathish at BetterButter
566
6
0.0(0)
0

உருளைக்கிழங்கு பேன்கேக்

Jan-19-2018
saranya sathish
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு பேன்கேக் செய்முறை பற்றி

உருளைக்கிழங்கு கோதுமை மாவு முட்டை வைத்து செய்த பேன்கேக்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு - 1 கப்
  2. சர்க்கரை - 1/4 கப்
  3. வேகவைத்து தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்த உருளைக்கிழங்கு - 1 கப்
  4. உப்பு - தேவையான அளவு
  5. பட்டை பொடி - 1/2 டீஸ்பூன்
  6. சாதிக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
  7. பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
  8. முட்டை - 1
  9. பால் - 11/2 கப்
  10. வெண்ணிலா எசன்ஸ்ச் - 1/2 டீஸ்பூன்
  11. எண்ணெய் - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மாவு அனைத்தையும் கலந்து வைக்கவும்.
  2. பின்னர் வேறு ஒரு பாத்திரத்தில் முட்டை சேர்த்து நன்றாக பீட் செய்யவும்.
  3. பின் சர்க்கரை, பால், எசன்ஸ்ச், உருளைக்கிழங்கு விழுது சேர்த்து நன்கு பீட் செய்யவும்.
  4. பின் மாவு கலவையை சிறிது சிறிதாக சேர்த்து கலந்து கொள்ளவும்.
  5. தோசை கல்லில் எண்ணெய் தடவி சூடு செய்யவும்.
  6. பின் மாவை கொண்டு சிறு தோசைகளாக ஊற்றி எண்ணெய் ஊற்றி மூடி போட்டு இரண்டு புறமும் வேகவைத்து எடுத்தால் சுவையான பேன்கேக் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்