வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு பூரி

Photo of Potato poori by Yasmin Shabira at BetterButter
325
8
0.0(0)
0

உருளைக்கிழங்கு பூரி

Jan-19-2018
Yasmin Shabira
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு பூரி செய்முறை பற்றி

உருளைக்கிழங்கில் செய்த சுவையான பூரி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு : 2
  2. கோதுமை மாவு : 2 கப்
  3. ரவா : 2 தேக்கரண்டி
  4. மஞ்சள் தூள் : 1/4 தேக்கரண்டி
  5. மிளகாய் தூள் : 1/2 தேக்கரண்டி
  6. உப்பு : 1 தேக்கரண்டி
  7. எண்ணெய் : பூரி சுட தேவையான அளவு

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்து கொள்ளவும்
  2. அதில் கோதுமை மாவு, ரவா, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்துவிடவும்
  3. பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நன்கு கெட்டியான மாவாக பிசைந்து கொள்ளவும்
  4. சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கட்டையில் தேய்த்து எடுக்கவும்
  5. அவற்றை சூடான எண்ணெயில் பொறித்து எடுக்கவும்...
  6. அவ்வளவு தான் சுவையான எளிதாக செய்ய கூடிய உருளைக்கிழங்கு பூரி தயார்...!!!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்