வீடு / சமையல் குறிப்பு / Potato mashed kurma

Photo of Potato mashed kurma by Yasmin Shabira at BetterButter
263
10
5(1)
0

Potato mashed kurma

Jan-19-2018
Yasmin Shabira
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • తేలికైనవి
 • ప్రతి రోజు
 • మితముగా వేయించుట
 • సైడ్ డిషెస్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு : 5
 2. வெங்காயம் : 1
 3. தக்காளி : 1
 4. பச்சை மிளகாய் : 4
 5. கேரட் : 2
 6. பச்சை பட்டாணி : 1 கப்
 7. பாதாம் : 1/4 கப்
 8. எண்ணெய் : 2 மேசை கரண்டி
 9. பட்டை : ஒரு துண்டு
 10. க்ராம்பு : 3
 11. ஏலக்காய் : 3
 12. பிரியாணி இலை : 1
 13. சோம்பு : 1/2 தேக்கரண்டி
 14. இஞ்சி பூண்டு விழுது : 1 மேசைக்கரண்டி
 15. மிளகாய் தூள் : 1 மேசைக்கரண்டி
 16. மஞ்சள் தூள் : 1/2 தேக்கரண்டி
 17. ஜீரக தூள் : 1 தேக்கரண்டி
 18. மல்லி தூள் : 1 தேக்கரண்டி
 19. மல்லி தழை : ஒரு கைப்பிடி
 20. உப்பு : ருசிக்கேற்ப

வழிமுறைகள்

 1. 2 உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி பாதாமுடன் சேர்த்து மிக்ஸியில் பேஸ்டாக அரைத்து கொள்ளவும்
 2. கடாய் அல்லது ப்ரெஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை க்ராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சோம்பு சேர்க்கவும்
 3. பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
 4. வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
 5. பிறகு மிளகாய் தூள் மஞ்சள் தூள் ஜீரக தூள் மல்லி தூள் உப்பு சேர்த்து வதக்கவும்
 6. பின்னர் உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி கேரட் சேர்த்து கிளறிவிட்டு காய்கறிகள் மூழ்கும் அளவு 2-3 கப் தண்ணீர் சேர்க்கவும்...
 7. மூடி போட்டு மூடவும்
 8. பிரஷர் குக்கராக இருந்தால் அதிக தணலில் 2 விசில் வைத்தால் போதும்
 9. காய்கறிகள் நன்றாக வெந்ததும் அரைத்து வைத்த உருளைக்கிழங்கு பாதாம் பேஸ்ட்டை சேர்த்து நன்றாக கலந்துவிடவும்..
 10. தேவையெனில் சிறிது தண்ணீர் ஊற்றி மேலும் 5 நிமிடம் வரை நன்றாக கொதிக்க விடவும்
 11. கடைசியாக மல்லி தழை தூவி இறக்கவும்...
 12. இது சாதம் சப்பாத்தி பூரியுடன் மிகவும் சுவையாக இருக்கும்...

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Adaikkammai annamalai
Jan-19-2018
Adaikkammai annamalai   Jan-19-2018

Wow... Nice one..

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்