வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு சுருள் பப்ஸ்

Photo of Potato Spiral Puffs by Hameed Nooh at BetterButter
46
6
0.0(0)
0

உருளைக்கிழங்கு சுருள் பப்ஸ்

Jan-20-2018
Hameed Nooh
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு சுருள் பப்ஸ் செய்முறை பற்றி

மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு ஸ்டப்பிங் கொண்ட இந்த பப்ஸ் சுருள் போல் மடிப்பாக இருப்பதால் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • மீடியம்
 • ஃபிரையிங்
 • அக்கம்பனிமென்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. மாவு பிசைவதற்கு :
 2. மாவு - 1 கப்
 3. வெண்ணெய் - 1/4 கப்
 4. உப்பு - சுவைக்கேற்ப
 5. உருளைக்கிழங்கு பூரணம் செய்ய :
 6. உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
 7. காரட் - 100 கிராம்
 8. பல்லாரி - 2
 9. நறுக்கிய மல்லித்தழை - கொஞ்சம்
 10. சிக்கன் மசாலா - 1 தேக்கரண்டி
 11. மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
 12. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
 13. உப்பு - சுவைக்கேற்ப
 14. எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
 15. எண்ணெய் - பொறிப்பதற்கு

வழிமுறைகள்

 1. மாவு பிசைவதற்கு தேவையான பொர்ட்களை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் நன்றாக பிசைந்து அரை மணி நேரங்கள் மூடி போட்டு வைக்கவும்
 2. முதலில் உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டை அவித்து மசித்துக் கொள்ளவும்.
 3. பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வேக விடவும்.
 4. வெங்காயம் சிறிது வெந்ததும் மசித்த உருளைக்கிழங்கு மற்றும் காரட்டை சேர்த்து வதக்கவும்.
 5. அதோடு மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
 6. 2 நிமிடங்கள் நன்கு வேகவிட்டு மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
 7. 2 மேசைக்கரண்டி மாவுடன் 2 தேக்கரண்டி எண்ணெய் மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்துக் கொள்ளவும்.
 8. பிறகு ஊற வைத்துள்ள மாவை சம பாகங்களாக பிரித்து உருண்டைகளாக பிடிக்கவும்
 9. பிறகு மாவு உருண்டைகளை பலகையில் வட்டமாக வளர்த்துக் கொள்ளவும்.
 10. வளர்த்த மாவு ஒன்றை பலகையில் வைத்து அதிலே மாவு பேஸ்டை தடவவும்.
 11. பிறகு அதன் மீது மற்றொன்றை வைத்து இடையை பேஸ்டை தடவவும். இவ்வாறாக அனைத்தையும் ஒன்றன் மீது ஒன்றாக வைத்து இடையில் பேஸ்டை பரப்பி செய்து முடிக்கவும்
 12. பிறகு அனைத்தையும் ஒன்றாக பலகையில் தேய்த்து உருளையாக கெட்டியாக சுருட்டவும்.
 13. பிறகு அதனை கத்தியைக் கொண்டு சம பாகங்களாக வெட்டவும்
 14. பிறகு ஒவ்வொன்றையும் வட்டமாக வளர்த்து இடையில் உருளைக்கிழங்கு பூரணத்து வைக்கவும்.
 15. இரண்டாக மடித்து ஓரங்களை தண்ணீரில் நனைத்து ஒன்றாய் தட்டி சுருள் போல் மடக்கவும்.
 16. கடாயில் எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக பொறித்தெடுக்கவும்.
 17. சுடச்சட உருளைக்கிழங்கு சுழல் பப்ஸ் தயார். மாலை நேர சிற்றுண்டியாக தேனீரோடு சாப்பிடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்