வீடு / சமையல் குறிப்பு / உருளை வேர்க்கடலை குணுக்கு

Photo of Potato peanut balls by Sowmya Sundar at BetterButter
240
5
0.0(0)
0

உருளை வேர்க்கடலை குணுக்கு

Jan-20-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உருளை வேர்க்கடலை குணுக்கு செய்முறை பற்றி

உருளைக்கிழங்கு வேர்க்கடலை சேர்த்து செய்யும் சுலபமான சுவையான குணுக்கு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • சௌத்இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு -4
  2. வறுத்த வேர்க்கடலை -1/2கப்
  3. அரிசி மாவு -3 டேபிள் ஸ்பூன்
  4. கார்ன் ஃப்ளோர் -1 டேபிள் ஸ்பூன்
  5. பச்சை மிளகாய் -4
  6. உப்பு
  7. பெருங்காயம் -1/4 டீஸ்பூன்
  8. எலுமிச்சை சாறு -1 டீஸ்பூன்
  9. கறிவேப்பிலை கொத்தமல்லி தழை சிறிது
  10. எண்ணெய் -பொரிக்க

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை குக்கரில் தண்ணீர் ஊற்றி நன்கு வேகவைத்து எடுக்கவும்
  2. வேர்க்கடலையை பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக பொடித்து கொள்ளவும்
  3. ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, வேர்க்கடலை பொடி மற்றும் அனைத்து பொருட்களையும் (எண்ணெய் தவிர) சேர்த்து தண்ணீர் விடாமல் கலந்து கொள்ளவும்.
  4. எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் காய வைத்து மாவுடன் கலந்து கொள்ளவும்
  5. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை சிறு உருண்டைகளாக உருட்டி போட்டு நன்றாக பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  6. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்