வீடு / சமையல் குறிப்பு / Baby potato paruppu adaitha kari

Photo of Baby potato paruppu adaitha kari by Krishnasamy Vidya Valli at BetterButter
573
5
0.0(1)
0

Baby potato paruppu adaitha kari

Jan-20-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பேபி பொட்டட்டோ - 6 முதல் 8
  2. மஞ்சள் பொடி - 2 சிட்டிகை
  3. புளி கரைசல் - 1 தேக்கரண்டி
  4. உப்பு - 1 / 4 தேக்கரண்டி
  5. வறுத்து திரிக்க
  6. எண்ணெய் - 2 டிராப்ஸ்
  7. கடலைப்பருப்பு - 1 / 2 தேக்கரண்டி
  8. உளுத்தம்பருப்பு - 1 / 2 தேக்கரண்டி
  9. மிளகாய் வத்தல் - 2
  10. மிளகு - 4
  11. சீரகம் - 1 சிட்டிகை
  12. பெருங்காயம் - 2 சிட்டிகை
  13. கொத்தமல்லி விதை - 1 / 2 தேக்கரண்டி
  14. தேங்காய் துருவல் - 1 / 2 தேக்கரண்டி
  15. எள்ளு - 1 சிட்டிகை
  16. கஸகஸா - 2 சிட்டிகை
  17. ஏலக்காய் - 1
  18. கிராம்பு - 1
  19. பட்டை - 1 சிறிய துண்டு
  20. உப்பு - 2 சிட்டிகை
  21. தாளிக்க கடுகு - 1 / 4 தேக்கரண்டி
  22. உளுத்தம்பருப்பு - 1 / 4 தேக்கரண்டி
  23. எண்ணெய் - 4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பேபி பொட்டட்டோவை தோல்சீவி வைக்கவும்
  2. மேல்புறம் நான்காக கீறிக்கொள்ளவும்
  3. அதோடு உப்பு மஞ்சள்பொடி புளி கரைசல் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து மைக்ரோவேவ் ஓவனில் 5 நிமிடங்கள் வேகவைக்கவும். குழைய கூடாது. தேவைப்பட்டால் கூடுதல் 3 நிமிடங்கள் வைக்கவும்
  4. வறுத்து திரிக்க கொடுத்தவற்றை (உப்பு தவிர ) நன்றாக வறுத்து உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக திரிக்கவும்
  5. தண்ணீரை வடித்து விட்டு திரித்த பொடியை ஏற்கனவே கீறி வைத்திருந்த பகுதியில் அடைக்கவும்
  6. கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு தாளிக்கவும்
  7. பேபி பொட்டட்டோவை அப்படியே அதில் அடுக்கி வைக்கவும்
  8. மேலே எண்ணெய் விட்டு சிறிது நேரம் கழித்து பிரட்டி கொடுக்கவும்.
  9. பொன்னிறமாக வதங்கியதும் அடுப்பை அணைத்து விடவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-21-2018
Pushpa Taroor   Jan-21-2018

Super

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்