வீடு / சமையல் குறிப்பு / ஆப்கானி போரணி கச்சாலு

Photo of Afghani Borani Kachalu by Ayesha Ziana at BetterButter
444
8
0.0(0)
0

ஆப்கானி போரணி கச்சாலு

Jan-20-2018
Ayesha Ziana
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
12 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஆப்கானி போரணி கச்சாலு செய்முறை பற்றி

ஆப்கானிஸ்தானில் பிரபலமான உருளைக்கிழங்கு சைட் டிஷ்.

செய்முறை டாக்ஸ்

  • ஆப்கானி
  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு 1 பெரியது
  2. துருவிய இஞ்சி 2 ஸ்பூன்
  3. துருவிய பூண்டு 4 ஸ்பூன்
  4. தக்காளி சாஸ் அல்லது கெட்சப் 1 டேபிள் ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  6. உப்பு சிறிது
  7. தண்ணீர் சிறிது
  8. ஆலிவ் எண்ணெய் அல்லது வேறு எண்ணெய் 3 ஸ்பூன் அல்லது தேவைக்கு
  9. டாப்பிங் செய்ய: தயிர் 50 கிராம்
  10. பிரஷ் புதினா இலைகள் 10
  11. காய்ந்த புதினா இலைகள் சிறிது

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கைத் தோல் சீவி, சற்று தடிமனான வட்ட வட்ட துண்டுகளாக நறுக்கவும்.
  2. அகலமான வாணலியில் எண்ணெய் ஊற்றி துருவிய இஞ்சி, துருவிய பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. பின்னர் தக்காளி கெட்சப் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அடிப்பிடிக்காமல் கிளறவும்.
  4. பின்பு, உருளைக்கிழங்கு, 1/4 கப் அல்லது சற்று அதிகமாக தண்ணீர், மற்றும் சிறிது உப்பு சேர்த்து மூடி போட்டு வேக விடவும். இடையிடையே கிளறி விடவும். அடிப்பிடிக்காமல் இருக்க தம் முறையில் வேக வைக்கலாம்.
  5. 10 நிமிடங்கள் கழித்து, அல்லது கிழங்கு வெந்து உள்ளே கத்தி வைத்து பார்த்தால் ஒட்டாமல் இருக்கும் பதம் வந்ததும், அடுப்பை அணைத்து விடவும். கலவை கிழங்கின் மேல் கோட்டிங் கொடுத்தது மாதிரி இருக்கும்.
  6. ஒரு கிண்ணத்தில் தயிர், சிறிது உப்பு, பொடியாக நறுக்கிய பிரஷ் புதினா இலைகள் சேர்த்து நன்றாக அடித்து கலக்கவும்.
  7. உருளை கலவை ஆறியதும், ஒவ்வொரு துண்டாக எடுத்து தட்டில் அடுக்கி, அவற்றின் மேல் தயிர் கலவையை வைக்கவும். பின்பு காய்ந்த புதினா இலைகளையும் கசக்கி அவற்றின் மேல் போடவும்.
  8. சூப்பரான ஆப்கானி போரணி கச்சாலு தயார். இதை நான்/வெரைட்டி ரைஸ் போன்றவற்றுடன் பரிமாறலாம். இது பார்ட்டிகளுக்கு பரிமாற ஏற்றது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்