வீடு / சமையல் குறிப்பு / உருளை லட்கீஸ்

Photo of Potato Latkes by Ayesha Ziana at BetterButter
225
9
0.0(0)
0

உருளை லட்கீஸ்

Jan-20-2018
Ayesha Ziana
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

உருளை லட்கீஸ் செய்முறை பற்றி

லட்கீஸ் யூதர்களின் பிரபலமான ஒரு உணவு. இது பான்கேக் வகையைச் சேர்ந்தது. இங்கு பதிந்துள்ள ரெசிபி இந்திய உணவுக்கேற்ப மாற்றி கொடுக்கப்பட்டிருக்கிறது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஐரோப்பிய
  • ஷாலோ ஃபிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. உருளைக்கிழங்கு 1 பெரியது
  2. வெங்காயம் 1/2 துருவியது அல்லது பொடியாக நறுக்கியது
  3. பச்சை மிளகாய் 2 பொடியாக நறுக்கியது
  4. கொத்தமல்லித்தழை சிறிது பொடியாக நறுக்கியது
  5. சீரகம் 1/2 ஸ்பூன்
  6. சோள மாவு 3 ஸ்பூன் அல்லது தேவைக்கு
  7. சாட் மசாலா மேலே தூவ
  8. உப்பு தேவைக்கு
  9. வெண்ணெய் மேலே போட
  10. எண்ணெய் ஷாலோ ப்ரையாக பொரிக்க

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை தோல் சீவி, துருவி தண்ணீரைப் பிழிந்து வடிகட்டிக் கொள்ளவும்.
  2. ஒரு பவுலில் கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித்தழை, கல்லில் வைத்து ஒன்றிரண்டாக பொடித்த சீரகம், உப்பு, சோள மாவு அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  3. நான்ஸ்டிக் பேனில் சிறிது எண்ணெய் ஊற்றி, கலவையை சிறிய அடைகளாக தட்டி, இரு பக்கமும் ஷாலோ ப்ரை செய்யவும்.
  4. பின்னர், தட்டில் வைத்து, சாட் மசாலா தூவி, வெண்ணெய் சேர்த்து பரிமாறவும்.
  5. மிகவும் சுவையான உருளை லட்கீஸ் தயார். இது குழந்தைகளுக்கு சிற்றுண்டியாக பரிமாற ஏற்றது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்