Photo of Aloo kashta kachori by Adaikkammai Annamalai at BetterButter
687
13
0.0(3)
0

Aloo kashta kachori

Jan-21-2018
Adaikkammai Annamalai
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு / ரிபைண்டு மாவு - 1 கப்
  2. கோதுமை மாவு - 2 கப்
  3. ரவை - ஒரு கை அளவு
  4. உப்பு - சிறிது
  5. எண்ணெய் - பொரிக்கும் அளவு
  6. உள்ளே அடைப்பதற்கு செய்ய தேவையான பொருட்கள்
  7. பாசி பருப்பு - 1/4 கப்
  8. மல்லி தூள் - 2 ஸ்பூன்
  9. மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
  10. சோம்பு தூள் - 2 ஸ்பூன்
  11. சீரகத்தூள் - 2 ஸ்பூன்
  12. கரம் மசாலா தூள் - 2 ஸ்பூன்
  13. சேட் மசாலா தூள் - 1 ஸ்பூன்
  14. மசித்த உருளை கிழங்கு - 1
  15. உப்பு - சிறிது

வழிமுறைகள்

  1. முதலில் மைதா ..,கோதுமை .., ரவை .. சிறிது எண்ணெய் விட்டு உப்பு போட்டு பிசைந்து எடுத்து கொள்ளவும் சப்பாத்தி மாவு பதத்திற்கு
  2. ஒரு 10 நிமிடம் தனியாக அதை வைக்கவும்
  3. பிறகு பாசி பருப்பை சிவக்க வறுத்து எடுத்து ஆற வைக்கவும்
  4. ஆறிய பின் அதை பொடி செய்து எடுத்து கொள்ளுங்கள்
  5. ரொம்ப லேசாக இல்லாமல் கர கர வென்று அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
  6. பின் உள்ளே அடைப்பதற்கு (stuff) செய்வதற்கு தேவையான பொருளை எடுத்து கொள்ளவும் . அதனுடன் ஒரு உருளைகிழங்கை வேக வைத்து மசித்து எடுத்து கொள்ளவும்.
  7. பின் பாசி பருப்பு அரைத்து எடுத்த பொடியுடன் மசித்த உருளை சேர்த்து பிசையவும்
  8. பின் மேலே குறிப்பிட்ட தக்கவாறு அனைத்து பொடியும் ஒன்றாக கலந்து 2 ஸ்பூன் சாட் மசாலா மற்றும் 1 ஸ்பூன் உப்பு போடவும்
  9. சிறிது தண்ணீர் ஊற்றி வர வர பொடி போல் தயார் செய்து வைத்து கொள்ளுங்கள் .
  10. இதே போல் பொடியாகவே இருக்க வேண்டும்.
  11. பின் பிசைந்து வைத்த மாவை எடுத்து உருட்டி ஒரு உருண்டை எடுத்து சின்ன வட்டமாக தேய்க்கவும்
  12. வட்டமாக இந்த அளவுக்கு தேய்த்து எடுக்கவும்
  13. அதன் பின் தயார் செய்து வைத்த பொடியை 1 ஸ்பூன் எடுத்து தேய்த்து வைத்த மாவில் வைக்கவும் இதே போல்
  14. இதே போல் வைத்து பூரண கொலுக்கட்டை போல் பிடித்து அமுக்கி வட்டமாக எடுத்து கொள்ளவும்
  15. இதே போல் உருட்டி எடுக்கவும்.
  16. உருட்டி எடுத்து அதை மெதுவாக வட்டமாக சரிசமமாக சின்னதாக தேய்த்து எடுக்கவும்.
  17. தேய்த்து எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.
  18. அதே போல் அனைத்தையும் செய்து தட்டில் வைக்கவும் .
  19. அடுப்பில் எண்ணையை வானலியில் சேர்த்து அதிகமாக காய விடாமல் மிருதுவான தீயில் முதலிலே போடவும் அப்பொழுது தான் சூடு ஏற ஏற நல்ல பொசு பொசு வென்று வரும்.
  20. மெதுவாக திருப்பி போடவும்
  21. நன்றாக பொசு பொசு வென்று வெந்தவுடன் சிவக்க ஒரு அளவுக்கு எடுக்கவும்
  22. சுவையான ஆளு கஸ்தா கசோரி தயார். புதினா சட்னியுடன் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Anand Ramamorthy
Jan-22-2018
Anand Ramamorthy   Jan-22-2018

Tasteeee

Paramasivam Sumathi
Jan-22-2018
Paramasivam Sumathi   Jan-22-2018

Superb

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்