வீடு / சமையல் குறிப்பு / மசித்த உருளைக்கிழங்கு மேகங்கள்

Photo of Mashed Potato Clouds by Hameed Nooh at BetterButter
664
8
0.0(0)
0

மசித்த உருளைக்கிழங்கு மேகங்கள்

Jan-21-2018
Hameed Nooh
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

மசித்த உருளைக்கிழங்கு மேகங்கள் செய்முறை பற்றி

இது மிகவும் இலகுவான மற்றும் குழந்தைகளை கவரும் ஒரு பதார்த்தமாகும். மசித்த உருளையோடு சீஸ் மற்றும் முட்டை சேர்ப்பதால் சாப்பிட மிருதுவமானது மற்றும் ஆரோக்கியமானது.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. உருளைக்கிழங்கு - 1
  2. துருவிய சீஸ் - 1/ 4 கப்
  3. முட்டை - 1
  4. மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
  5. நறுக்கிய மல்லித்தழை - சிறிது
  6. உப்பு - சுவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. முதலில் சீஸை துருவி மற்றும் உருளைக்கிழங்கை அவித்து மசித்துக் கொள்ளவும்.
  2. முட்டையின் மஞ்சள் மற்றும் வெள்ளை கருவினை தனித்தனியாக பிரித்தெடுக்கவும்.
  3. முட்டையின் வெள்ளை கருவை நுரை பொங்கும் அளவிற்கு நன்கு பீட் செய்துக் கொள்ளவும்.
  4. அதோடு துருவிய சீஸ் மசித்த உருளைக்கிழங்கு மிளகுத்தூள் உப்பு சேர்த்து மெதுவாக கலக்கவும்.
  5. பேனில் வெண்ணையை சிறிது போட்டு உருகியதும் கலந்த கலவையை மெதுவாக நடுவில் குழிப் போல் செய்து மஞ்சள் கருவை ஊற்றவும்.
  6. வெந்ததும் தட்டில் வைத்து சிறிது மிளகுத்தூள் மற்றும் நறுக்கிய மல்லித்தழை தூவி சூடாக சாப்பிடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்