வீடு / சமையல் குறிப்பு / பீஃப் உருளைக் கிழங்கு கிரேவி

Photo of Beef and potato gravy by Rabia Hamnah at BetterButter
415
6
0.0(0)
0

பீஃப் உருளைக் கிழங்கு கிரேவி

Jan-21-2018
Rabia Hamnah
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பீஃப் உருளைக் கிழங்கு கிரேவி செய்முறை பற்றி

சுவையான காரசாரமான சைடிஷ்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கறி – அரை கிலோ
  2. உருளை கிழங்கு – 4
  3. இஞ்சி பூண்டு பேஸ்ட் – நான்கு தேக்கரண்டி
  4. வெங்காயம் – 3
  5. தக்காளி – 3
  6. தயிர் – கால் கப்
  7. மிளகாய் – 3
  8. மிளகாய் தூள் -2தேக்கரன்டி
  9. சீரகத் தூள்-3 ஸ்பூன்
  10. மிளகு தூள்-2 ஸ்பூன்
  11. மஞ்சள் தூள் – அரை தேக்கரன்டி
  12. பட்ட்டைகிராம்பு,ஏலம் – தலா இரண்டு
  13. உப்பு தே -அளவு ,
  14. முந்திரி – ஐந்து
  15. தேங்காய் – சின்ன அரைமூடி
  16. கொத்தமல்லி – ஒரு கொத்து
  17. புதினா – அரை கொத்து
  18. எண்ணை – கால் டம்ளர்

வழிமுறைகள்

  1. எண்ணையை காயவைத்து பட்டை ஏலம், லவங்கம் போட்டு வெடித்த்தும் வெங்காயம் போட்டு வதக்கவும். பொன்னிறமானதும் இஞ்சை பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.
  2. கொத்து மல்லி, புதினா போட்டு இரண்டு நிம்டம் வதக்கி தக்காளி, பச்ச மிளகாய் போடவும், மூடி போட்டு வேக விட்டு, மிளகாய் தூள், மஞ்சள் தூள, சீரகத் தூள், மிளகுத் தூள்,உப்பு போடவும். நல்ல கிளறி கறியை போட்டு தேவைக்கு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 15 நிமிடம் நிமிடம் வேக விடவும்.
  3. பிறகு தயிர் ,உருளைகிழங்கு நான்காக அரிந்து போட்டு நல்ல கிளறி குக்கரில் மூன்று விசில் விட்டு இறக்கி,தேங்காய் முந்திரியை அரைத்து ஊற்றி நல்ல இர்ண்டு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
  4. சிறிது மல்லி தழை தூவி இறக்கவும் சுவையான் பீஃப் உருளை கிரேவி ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்