வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு ஸ்வீட் கார்ன சீஸ் பால்ஸ்

Photo of Potato and sweet corn cheese balls by Muthulakshmi Madhavakrishnan at BetterButter
52
5
0.0(0)
0

உருளைக்கிழங்கு ஸ்வீட் கார்ன சீஸ் பால்ஸ்

Jan-22-2018
Muthulakshmi Madhavakrishnan
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு ஸ்வீட் கார்ன சீஸ் பால்ஸ் செய்முறை பற்றி

இந்த உருளைக்கிழங்கு ஸ்வீட் கார்ன் சீஸ் பால்ஸ் பார்ட்டிக்கு சிறந்த ஸ்டார்ட்டர். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • மீடியம்
 • கிட்டி பார்ட்டிஸ்
 • ஃபிரையிங்
 • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

 1. 3 உருளைக்கிழங்கு
 2. 1 கப் ஸ்வீட் கார்ன்
 3. 6 பூண்டு பற்கள்
 4. 1 பச்சை மிளகாய்
 5. 1 டீஸ்பூன் ஓரிகானோ
 6. 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள்
 7. 4 டீஸ்பூன் மக்காச்சோள மாவு
 8. 4 டேபிள் ஸ்பூன் மைதா
 9. 1 கப் துருவிய சீஸ் (அமுல் சீஸ் கியூப்ஸ்)
 10. 1 கப் பிரெட் தூள்
 11. உப்பு தேவையான அளவு
 12. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

 1. உருளைக்கிழங்கை குக்கரில் 5 விசில் வரும் வரை வேக வைத்து இறக்கவும். பின் ஸ்வீட் கார்னை குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைத்து இறக்கவும். பின் மிக்ஸியில் லேசாக அரைத்து கொள்ளவும்.
 2. உருளைக்கிழங்கு நன்கு ஆறியதும் கைகளால் மசித்து கொள்ளவும். மிக்ஸியில் ஜாரில் பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைக்கவும். பின் மசித்த கிழங்கோடு அரைத்த விழுதை சேர்த்து பிசையவும்.
 3. பின் அரைத்த ஸ்வீட் கார்ன் சேர்த்து நன்கு கலந்து பிசையவும்.
 4. இதோடு மிளகுத்தூள், ஓரிகானோ, மக்காச்சோள மாவு, 2 டேபிள் ஸ்பூன் மைதா மாவு சேர்த்து கலக்கவும்.
 5. பின் துருவிய சீஸ் சேர்த்து மெதுவாக பிசையவும்.
 6. ஒரு சிறிய பவுலில் 2 டேபிள் ஸ்பூன் மைதா மாவை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும்.
 7. உருளைக்கிழங்கு ஸ்வீட் கார்ன் கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
 8. ஒரு தட்டில் சிறிது மைதா மாவு மற்றொரு தட்டில் பிரெட் தூளையும் எடுத்து கொள்ளவும்.
 9. உருண்டைகள் ஒவ்வொன்றையும் மைதா மாவில் லேசாக பிரட்டிக்கொள்ளவும்.
 10. பின் கரைத்து வைத்துள்ள மைதா மாவு கலவையில் முக்கி கொள்ளவும்.
 11. பின் பிரெட் தூளில் நன்கு பிரட்டிக்கொள்ளவும்.
 12. வாணலியில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
 13. எண்ணெய் சூடானதும் பிரெட் தூளில் பிரட்டிய உருண்டைகளை போடவும். பின் ஒரு ஸ்பூனால் மெதுவாக திருப்பி பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்கவும்.
 14. சூடாக தக்காளி சாஸ் வைத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்