வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு எக் ஆம்லெட்

Photo of Potato Egg Omelette by Banupriya Jawahar at BetterButter
568
4
0.0(0)
0

உருளைக்கிழங்கு எக் ஆம்லெட்

Jan-22-2018
Banupriya Jawahar
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு எக் ஆம்லெட் செய்முறை பற்றி

வெறும் ஆம்லெட் சாப்பிட்டு போர் அடிக்கும் பட்சத்தில் உருளைக்கிழங்கு எக் ஆம்லெட் முயற்சித்துப் பாருங்கள்!

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பாச்சிலர்ஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. சிறிய உருளைக்கிழங்கு 1
  2. முட்டை 1
  3. சாம்பார்பொடி ருசிக்கு
  4. உப்பு தேவையான அளவு
  5. மஞ்சள் தூள் 1 சிட்டிகை
  6. மல்லித்தழை சிறிது
  7. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.
  2. தோசை கல்லை அடுப்பில் ஏற்றி, ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும், உ.கிழங்கு துருவலை சேர்க்கவும்.
  3. தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  4. தேவையான அளவு சாம்பார் பொடி சேர்க்கவும்.
  5. ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்க்கவும்.
  6. ஒரு நிமிடம் வதக்கவும்.
  7. உருளைக்கிழங்கு வதங்கியதும் அடித்து வைத்திருக்கும் முட்டையில் உ. கிழங்கு கலவையை சேர்க்கவும்.
  8. மல்லித்தழை சேர்த்து நுரை வர அடிக்கவும்.
  9. அதே தோசைக் கல்லில் ஆம்லெட்டாக வார்த்து எடுக்கவும்.
  10. சுவையான உருளைக்கிழங்கு எக் ஆம்லெட் ரெடி!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்