மாதுளை சாசைக்கொண்டு மாவு இல்லாத சாக்லேட் கேக் | Flour less chocolate cake with pomegranate sauce in Tamil

எழுதியவர் Flours Frostings  |  13th Feb 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Flour less chocolate cake with pomegranate sauce recipe in Tamil,மாதுளை சாசைக்கொண்டு மாவு இல்லாத சாக்லேட் கேக், Flours Frostings
மாதுளை சாசைக்கொண்டு மாவு இல்லாத சாக்லேட் கேக்Flours Frostings
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

1203

0

மாதுளை சாசைக்கொண்டு மாவு இல்லாத சாக்லேட் கேக் recipe

மாதுளை சாசைக்கொண்டு மாவு இல்லாத சாக்லேட் கேக் தேவையான பொருட்கள் ( Ingredients to make Flour less chocolate cake with pomegranate sauce in Tamil )

 • 90 கிராம் அடர் சாக்லேட்
 • 1/4 கப் அல்லது 56 கிராம் உப்பிடப்படாத வெண்ணெய்
 • 1/4 கப் அல்லது 50 கிராம் சர்க்கரைக் குருணை
 • 2 முட்டைகள், அறையின் வெப்பத்தில்
 • 2 தேக்கரண்டி கொகோ பவுடர்
 • 1 தேக்கரண்டி வெண்ணிலா
 • 2 தேக்கரண்டி தண்ணீர்
 • சாஸ்: 1/ மாதுளை சாறு (1/2 மாதுளையில் இருந்து)
 • 2 தேக்கரண்டி சர்க்கரை
 • 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு

மாதுளை சாசைக்கொண்டு மாவு இல்லாத சாக்லேட் கேக் செய்வது எப்படி | How to make Flour less chocolate cake with pomegranate sauce in Tamil

 1. 4 அல்லது 5 இன்ச் வட்டவடிவப் பாத்திரத்தை வெண்ணெயால் தடவவும். ஓவனை 180 டிகிரி செண்டிகிரேடுக்கு ப்ரீ ஹீட் செய்யவும். சாக்லேட்டையும் வெண்ணெயையும் அடுப்பின் மேல் அல்லது மைக்ரோவேவில் மென்மையாகும்வரை ஒன்றாக உருக்கிக்கொள்க.
 2. சர்க்கரையில் அடித்துக்கொள்க
 3. முட்டைகளில் ஒன்றன் பின் ஒன்றாகக் கலந்துகொள்க.
 4. கொகோ, வெண்ணிலா, தண்ணீரில் மென்மையாகும் வரை கலந்துகொள்க.
 5. தயாரித்து வைத்துள்ள பாத்திரத்தில் மாவை உற்றுக. பல் குத்தும் குச்சியை மையத்தில் நுழைத்தால் சுத்தமாக வெளிவரும்வரை 25-30 நிமிடங்கள் பேக் செய்யவும்.
 6. ஒரு பாத்திரத்தில் 5 நிமிடங்களுக்கு ஆறவிட்டு ஒரு ஒயர் ரேக்கில் முழுமையாக ஆறுவுதற்காகக் கவனமாக வெளியில் எடுக்கவும்.
 7. இதற்கிடையில் சாசைத் தயாரித்துக்கொள்க. மாதுளை சாறு (மாதுளை விதைகளை ஒரு மிக்சியில் அரைத்து வடிக்கட்டிக்கொள்க), சர்க்கரை, எலுமிச்சைச் சாற்றைக் கலந்து கொதிக்கவிடவும். தீயை அடக்கி, அடர்த்தியாகும்வரை சிம்மில் கிட்டத்தட்ட 6-8 நிமிடங்கள் வைக்கவும். ஆறட்டும்.
 8. கேக் துண்டுகளை சாசுடன் சேர்த்து அல்லது மேலே தூவி பரிமாறவும்.

Reviews for Flour less chocolate cake with pomegranate sauce in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.