வீடு / சமையல் குறிப்பு / வாட்டப்பட்ட ரொட்டியில் உருளைக்கிழங்கு அடைத்த குடைமிளகாய் வறுவல்

Photo of Potato Stuffed Bell Peper In A Bread Toast by Hameed Nooh at BetterButter
33
7
0.0(0)
0

வாட்டப்பட்ட ரொட்டியில் உருளைக்கிழங்கு அடைத்த குடைமிளகாய் வறுவல்

Jan-22-2018
Hameed Nooh
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாட்டப்பட்ட ரொட்டியில் உருளைக்கிழங்கு அடைத்த குடைமிளகாய் வறுவல் செய்முறை பற்றி

இந்த டோஸ்ட் காலை மற்றும் மாலை சிற்றுணடிக்கு தயாரித்து கொடுக்க மிகவும் இலகுவானது. மிக்க சத்தானதும் கூட. ஐந்து நிமிடங்களில் தயாரித்து விடலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு - 2
  2. கேரட் - 1 ( நடுத்தரமானது )
  3. பீன்ஸ் - 3
  4. குடைமிளகாய் - 1 ( பெரியது )
  5. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  6. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
  7. நறுக்கிய மல்லித்தழை - சிறிது
  8. எலுமிச்சை சாறு - 1/2 தேக்கரண்டி
  9. ப்ரட் க்ரம்ஸ் - 1/4 கப்
  10. ப்ரட் துண்டுகள் - 4
  11. வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  12. கெட்டித்தயிர் - 2 மேசைக்கரண்டி
  13. உப்பு - சுவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. காய்கறிகளை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
  2. அதோடு மிளகாய் தூள் கரம் மசாலா எலுமிச்சை சாறு ப்ரட் க்ரம்ஸ் உப்பு சேர்த்து நன்கு பிசையவும்.
  3. குடைமிளகாயின் மேல் பாகத்தை வெட்டி உள்ளே உள்ள விதைகளை நீக்கவும்.
  4. உருளைக்கிழங்கு மசாலாவை அதன் உள்ளே இருக்கமாக வைத்து கரண்டியால் அழுத்தம் கொடுக்கவும்.
  5. பிறகு சம பாகங்களாக வெட்டவும்.
  6. தவாவில் வெண்ணை விட்டு சூடானதும் குடை மிளகாய் வளையங்களை வைத்து இரண்டு புறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
  7. அதே தவாவில் சிறிது வெண்ணெய் விட்டு ப்ரட் துண்டுகளை டோஸ்ட் செய்யவும்.
  8. ப்ரட் துண்டுகளின் மீது குடை மிளகாய் வளையங்களை வைத்து மேலே கெட்டித் தயிர் அல்லது க்ரீம் வைத்து மிளகாய் தூள் சிறிது தூவி சூடாக சாப்பிடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்